அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார்: வடகொரியா திடீர் அறிவிப்பு
அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து சமீபத்தில் போர் பயிற்சிகளில் ஈடுபட்டது. இதன் காரணமாகவும், ஐக்கிய நாடுகள் விதித்திருந்த பொருளாதார தடைகளை எதிர்த்தும், வடகொரியா தனது அண்டை நாடான தென் கொரியா மீதும் அதன் நட்பு நாடான அமெரிக்கா மீதும் போர் பிரகடனம் செய்தது.
இதனால் கொரியா தீபகற்பத்தில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருபதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
இதை அடுத்து வடகொரியா இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
பேச்சு வார்த்தையும் போரும் ஒரே சமயத்தில் நடைபெறாது. அமெரிக்காவும் அதன் கைப்பாவையான தென்கொரியாவும் எங்கள் மக்கள் மற்றும் இராணுவத்திடம் இருந்து சம்மட்டி அடிவாங்குவதை தவிர்க்க, உண்மையிலேயே பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அவர்கள் உறுதியான முடிவினை எடுக்க வேண்டும்.
முதலில் ஜோடிக்கப்பட்ட நியாயமற்ற விதத்தில் ஐக்கிய நாடுகள் எங்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டும். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களற்ற நிலையை உருவாக்க, கொரிய மண்ணில் அமெரிக்கா நிறுவியுள்ள அணு ஆயுத தளவாடங்களை திரும்பப் பெறவேண்டும். இது அணு ஆயுதங்கள் அற்ற உலகம் உருவாக வழிவகுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment