தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் வீடுதலைப்புவிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் கடற்புலிகளின் தளபதி சூசை உட்பட்ட 100 போராளிகள் இராணுவத்தினருடன் நடைபெற்ற யுத்தத்தின் போது கொல்லப்பட்டனரே தவிர அவர்கள் யாரும் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும் யுத்தத்தின் இறுதியல் எடுக்கப்பட்ட பிரபாகரன் மற்றும் சூசையின் குண்டுதுளைத்த உடலங்கள் இதனையே தெரிவிப்பதாகவும் இதன் மூலம் இருவரும் கடைசிவரை போராடியே மரணமானார் என்பதை வெளிப்படுத்துவதுடன் போராட்டத்தின் போதே கொல்லப்பட்டார்கள் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்ததாக குறிப்பிட்டார்.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஹலால் பிரச்சினை தொடர்பில் ஜெனரல் பொன்சேகாவினுடைய நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் கொழும்பில் உள்ள சரத் பொன்சேகாவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டதுடன் அவ்விருவரும் தற்கொலைச் செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களையும் நிராகரித்தார்.
மேலும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானின் மனைவியின் உடல் சயனைட் உண்டு இறந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனால் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் எனக்குறிப்பிட்ட சரத் பொன்சேகா பொட்டு அம்மான் பற்றிய தகவல்கள் ஏதும் தெரியாது எனக்குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment