Friday, April 12, 2013

இலங்கையில் பயங்கரவாதத்தை உருவாக்கிய குற்றச்சாட்டிலிருந்து இந்தியா விடுபடமுடியாது. கோட்டா

தனி ஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்துக்கு இந்தியாவே காரணம் என்றும் இலங்கையில் பயங்கரவாதத்தை உருவாக்கிய குற்றச்சாட்டிலிருந்து சர்வசாதாரணமாக விடுபடமுடியாது எனவும் பாதுகாப்பு அமைச்சி செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உச்சகட்ட போர் நடைபெற்றபோது கடைசி 100 நாள்களில் போர் குற்றங்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஐ.நா. மன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.சபைக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர உறுப்பினர் ஹர்தீப்சிங் பூரி கருத்து வெளியிட்டிருந்தார்.

ஹர்தீப்சிங்கின் மேற்படி கூற்றுத்தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு பதிலளிக்கையில் மேற்காண்டவாறு கூறிய பாதுகாப்பு செயலாளர் இலங்கையில் நிகழ்ந்த தீவிரவாதம் குறித்து குரல் எழுப்பாதவர்கள், போர்க்காலத்தில் நிகழ்ந்தவை பற்றி விசாரணை கோருவது வேடிக்கையாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

தமிழ் ஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியாதான் காரணம் என்றும் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்த 1988-ம் ஆண்டில் இந்தியாவால் பயற்சியளிக்கப்பட்ட இலங்கை தீவிரவாதிகள் மாலத்தீவின் மீது தாக்குதல் நடத்தியதையும், இச்சம்பவத்துக்குப் பிறகு இலங்கை அரசு சந்தித்த நெருக்கடிகளையும் இந்தியா உணர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


4 comments:

  1. Mr, Kothabaya is correct and i am agree with our defence minister.

    ReplyDelete
  2. Why did India or UNO involve in our country? Because, of our wrong governments and wrong political leaders. Until now, None of the governments want to resolve the main problems. None of the political leaders want real peace and harmony in our country.

    So, Sorry for Sri Lanka mother country.

    ReplyDelete
  3. Hon.Defence secretary has the backbone,we think that he defends the country in every respects and not a betrayer.Why not we say him as defender of the country.

    ReplyDelete
  4. He is a the loyalist,by comparision an ounce loyality worth than a pound of cleverness.

    ReplyDelete