புலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர் சாம் தம்பிமுத்து. தாயையும் தந்தையையும் புலிகளின் தாக்குதலுக்கு பலி கொடுத்த அருண் பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்தார். தற்போது தந்தை வழியில் அரசியலில் இறங்கியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கான மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக உள்ளார்.
சாம் தம்பிமுத்துவின் வீடு 1990 களின் இறுதிப் பகுதியில் ஈபிஆர்எல்எப் எனப்படுகின்ற ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் முக்கியஸ்தரும் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவருமான ராசிக்கினால் பயன்படுத்தப்பட்டு வந்தது. ராசிக்குழுவினர் இந்த வீட்டினை தங்கள் முகாமாக பயன்படுத்தினர்.
புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த கிழக்குப்புலிகள் ஈபிஆர்எல்எப் வசமிருந்த வீட்டினை கைப்பற்றினர். கிளர்ச்சிக் குழுவினரால் நிறுவப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பின் தலைமைக் காரியாலயமாக, முன்னாள் முதலமைச்சரின் வாசஸ்தலமாக உருமாற்றம் பெற்றுள்ளது சாம் தம்பிமுத்துவின் வீடு.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளனான அருண் தம்பிமுத்து தற்போது தனது வீடு வேண்டுமென்கின்றார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடமும் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பில் வீட்டினை தம் வசம் வைத்திருக்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படுகின்ற சந்திரகாந்தனை இலங்கைநெற் தொடர்பு கொண்டு வினவியபோது, இந்த வீட்டை நான் விலைக்கு வாங்கியுள்ளேன் அத்துடன் அதனை கட்சியின் பெயருக்கும் எழுதிவிட்டேன், விலைக்கு வாங்கிய வீட்டை எவ்வாறு கொடுப்பது, அருண் தம்பிமுத்துக்கு மண்டையில் பிழை என்று கூறிய சிவநேசதுரை சந்திரகாந்தன் நாங்கள் ஆழும் கட்சியில் இருக்கின்றோம் அருணும் அதே கட்சியில்தான் இருக்கின்றார் புலிவால் ஊடகங்களின் வாய்கு அவல் கொடுக்காமல் என்னுடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று கூறினார்.
அருண் தம்பிமுத்து இது தொடர்பில் கூறுகையில் : பிள்ளையானுடன் என்ன பேச இருக்கின்றது. வீட்டை விட்டு போ என்று சொன்னால் நீங்கள் வீட்டை வில்லுங்கள் நான் அதை வாங்கப்போகின்றேன் என்கின்றார், இதுதான் அவர் பேசச்சொல்லுகின்ற விடயம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் பிள்ளையான் கள்ள உறுதி முடித்து வைத்திருக்கின்றார். பரிதாபம், யாரோ கள்ள அப்புக்காத்துமார் வழங்கிய ஆலோசனையின் பெயரில் அவர் உறுதி முடித்திருக்கின்றார். அந்த உறுதி எவ்வாறு அமைந்திருக்கின்றதென்றால் : பிள்ளையான் எனது வீட்டை இருபது வருடம் ஆட்சி செய்தாராம் , ஆட்சியின் பிரகாரம் நபரொருவருக்கு விற்றுள்ளார். பின்னர் விற்ற நபரிடம் அந்த காணியை சிவநேசதுரை சந்திரகாந்தன் விலைக்கு வாங்கியுள்ளார். இவ்வளவுதான் சமாச்சாராம் .
நான் இன்று மட்டக்களப்பில் அரசியல் செய்ய வந்துள்ளேன் எனக்கு தங்குவதற்கு இடமில்லை ஹோட்டல்களில் தங்குகின்றேன். இது எனது அடிப்படை உரிமை மீறப்படுகின்ற விடயம். இந்த வழக்கு சிவில் நீதிமன்று செல்லும், கள்ள உறுதியை வைத்து சில வருடங்கள் காலத்தை கடத்தலாம் என பிள்ளையான் கனவு காண்கின்றார், ஆனால் நான் அடிப்படை உரிமை மீறல் வழக்கு பதிவு செய்வேன்.
எனது தாய் தந்தையர் இறந்தபோது மட்டக்களப்பு நீதிமன்று வழங்கிய தீர்ப்பில் சாம் தம்பிமுத்து தம்பதிகளில் ஒரே வாரிசு அருண் என்றும் அவர்களில் சொத்துக்கள் யாவும் அருணுக்கே சொந்தமானது என்றும் தீர்பளிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment