Tuesday, April 30, 2013

பின்லேடனை காட்டிக் கொடுத்த டாக்டர் உண்ணாவிரதம்!

அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் அமெரிக்க அதிரடிப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை பாகிஸ்தானை சேர்ந்த ஷகில் அப்ரிடி என்ற டாக்டர் அமெரிக்க உளவுப் படையான சிஐஏவிடம் காட்டிக்கொடுத்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் தற்போது சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நோய் தடுப்பு முகாம் நடத்துவது போன்று போலியாக நாடகமாடி பின்லேடன் பதுங்கி இருந்த பங்களைாவுக்குள் நுழைந்தார். அங்கு பின்லேடனின் மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து ரத்த மாதிரிகளை சேகரித்தார். பின்னர் மரபணு பரிசோதனை மூலம் அங்கு பதுங்கி இருப்பது பின்லேடன் தான் என்பதை உறுதி செய்தார். அதைத் தொடர்ந்து அங்கு புகுந்த அமெரிக்க ராணுவம் பின்லேடனை சுட்டுக்கொன்றது. அவர் கொல்லப்பட்டவுடன் டாக்டர் ஷரில் அப்ரிடியை பாகிஸ்தான் அரசு கைது செய்து கராச்சி சிறையில் அடைத்தது.

இவருக்கு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள லஸ்கர் இ இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறையில் இருக்கும் இவர் அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். சிறை அதிகாரிகள் அவரை கொடுமைப்படுத்துவதாகவும் அவமரியாதையாக நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment