Monday, April 15, 2013

செங்கலடி இரட்டைக்கொலை : காதலுக்கு தடையாக இருந்ததால் மகளே பெற்றோரை கொல்ல தீட்டிய திட்டம் !

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்திலுள்ள விப்ரா பென்சி கோணர் உரிமையாளர் சிவகுரு ரகு அவரது மனைவியுடன் சேர்த்து கடந்த 7ம் திகதி நள்ளிரவு நேரத்தில் தனது வீட்டில் வைத்து மர்மான முறையில் வெட்டிக்கொலையப்பட்டிருந்தார். மர்மான இந்த இரட்டைக்கொலை தொடர்பில் பொலிஸார் இதுவரை பலரை கைது செய்து விசாரணை செய்த பொலிஸார் கொலையாளிகளை கண்டு பிடித்துள்ளனர்.

இறந்தவர்களின் 16 வயதான மகளே கொலையின் சூத்ரதாரி என்பது தெரியவந்துள்ளது. 16 வயதான மகளும் அவரது அதே வயதுடைய காதலனும் காதலனின் இரு நண்பர்களும் இணைந்து கொலையை புரிந்துள்ளமை விசாரணைகளில் தெளிவாகியுள்ளது.

காதலுக்கு தடையாக இருந்ததால் இந்த முடிவுக்கு வந்துள்ளாள் மகள். எனது பெற்றோரை கொல்! நான் இதுவரை 16 பேரை காதலித்துள்ளேன் இந்த பதினாறு காதலுக்கும் எனது பெற்றோரே தடையாக இருந்துள்ளனர். 17 வது உன்னையும் நான் இழக்க விரும்பவில்லை இவர்களை கொல் என்றாளாம் அவள்.

நண்பர்களுடன் பேசினான் காதலன். இரு நண்பர்கள்; இணங்கினார்கள். கொலைக்கான நாள் குறிக்கப்பட்டது.

அன்று 7ம் திகதி ரகு தனது மகளுடனும் மனைவியுடனும் காத்தான்குடிக்கு சித்திரைப்புத்தாண்டுக்கு ஆடைகள் வாங்கச் சென்றிருந்தார்.

மகளுக்கு புத்தாண்டுக்கு ஆடை வாங்கிக்கொடுக்கச் சென்றிருந்த ரகு மகள் தொலைபேசியில் கதைத்துக்கொண்டுவரும்போது, தனக்கு அவள் நேரம் குறிக்கின்றாள் என்பதை உணரவில்லை.

காத்தான்குடியில் நின்று காதலனை தொடர்பு கொண்ட மகள் வீட்டு திறப்பு எங்கே இருக்கின்றது என்றும் சாப்பாடு எங்கே இருக்கின்றது என்பதையும் காதலனுக்கு தெரிவித்தாள். வீட்டிற்கு சென்ற காதலன், சாப்பாட்டினுள் நித்திரை மாத்திரைகள் கரைத்து தூவிவிட்டு வெளியேறினான்.
மகளுக்கு 10 கடையேறி புத்தாண்டுக்கு உடுப்பு வாங்கி கொடுத்த களைப்பில் வீடு வந்த பெற்றோர் நித்திரை மாத்திரை கலந்த உணவை மூக்கு முட்ட அடித்துவிட்டு தூங்கினர்.

அவர்கள் தூக்கம் என்பதை உணர்ந்த மகள் காதலனின் கையடக்க தொலைபேசிக்கு அழைத்தாள். காதலனும் இரு நண்பர்களும் சுத்தியல்கள் கத்திகள் சகிதம் வந்தனர்.

கதவினை திறந்து தந்தையும் தாயும் உறங்கிக்கொண்டிருந்த அறையை திறந்து விட்டாள் அவள்.

முதலில் தாயை கொன்றனர்.

தந்தையை தூக்கிக்கொண்டு கிணற்றினுள் போடுவது என்பது திட்டம்.

தாயை கொன்றுவிட்டு தந்தையை கிணற்றினுள் போட்டுவிட்டால். நான் பொலிஸில் சாட்சி சொல்வேன். அப்பா அம்மாவை சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது அவள் போட்டுக்கொடுத்த திட்டம். தென்னிந்தியப்படம் பார்க்கும் நம்ப பிள்ளையளுக்கு இன்னும் சொல்ல வேண்டுமா?

மனைவியின் தலையில் சுத்தியல் அடிச்சத்தம் கேட்ட ரகு கண்முழித்தார். ஆனால் அவரால் கண்முழித்து பார்க்க மட்டும் முடிந்தது எழுந்து நடக்க முடியவில்லை.

மூவரும் சேர்ந்து அடித்தனர். இருவரது கதையும் முடிந்தது. காதலன் நண்பர்களுடன் விடைபெற்றுச் சென்றான்.

மகளின் காதலுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முழு விபரங்களுடன் மீண்டும் சந்திப்போம் ..

4 comments :

Anonymous ,  April 15, 2013 at 6:10 PM  

If it is true,it is predictable that South Indian Drama Serials and films are the cause of these unfortunate events.Now in these days violent dramas have become the part of their lives,it has such a good influence in the lives of most of the people.Psychologists should make statements to the government and to curtail the badones.

Anonymous ,  April 16, 2013 at 7:09 AM  

எம்மட்டில் எமது கலச்சாரம் சீரழிந்துள்ளது. பரிவு, பாசம், இரக்கம், கருணை, மரியாதை, பண்பு எல்லாமே போய்விட்டது. இவையாவும் முற்பது வருட கொடூர போராட்டத்தின் விளைவுகள்.

Anonymous ,  April 16, 2013 at 11:50 AM  

30 வருடப் போரால் புலி தந்த பரிசு.சுததிரதிற்கு என்று தொடக்கி சுதந்திரத்தைப் புலி பறித்து ,கலை,ஒழுக்கம்,பண்பு,நீதி நிஜாயம் அனைத்தும் போய் , அதர்மமும் அராஜகமும் தான் மிச்சம். ,

Anonymous ,  April 16, 2013 at 12:28 PM  

It is really shocking many of them spend their time in watching serial dramas,whether it is violent or ugly they don`t care ,They may fail to make their meals or important things,but at that particular time they are just in front of the TV.South Indian TV serials,dramas have a good influence in our daliy life,which could defnitely drive the younger generation into a danger zone.It is better to nib in the bud.South indians almost converted them into English traditions ,culture and the language too,They cannot utter a tamil sentence without English wordings.but better we would remain as Srilankans and take out the violent and ugly dramas and films out of us.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com