வடக்கில் முஸ்லீங்களுக்கு காணி வழங்குவது குறித்து பொதுபல சேனாவை பகிரங்க விவாத்திற்கு வருமாறு அழைக்கும் அமைச்சர் றிசாத்
முஸ்லிம்களின் தாயகப் பிரதேசமான வடக்கிலிருந்து புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளான முஸ்லிம்கள் மீண்டும் அங்கு மீளக்குடியமர அனைத்து உரிமைகளும் உண்டு. இதனை சர்வதே சமூகமும், தற்போதைய அரசாங்கமும் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் காணிகளை ஆக்கிரமித்து அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு அவ்விடங்களை வழங்கி வருவதாக பொதுபல சேனா குற்றம் சுமத்துவது தொடர்பில் அவர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு தயாரென அமைச்சர் றிசாத் பதியுத்தீன் சூளுரைத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் றிசாத் மேலும் தெரிவித்திருப்பதாவது வடக்கு முஸ்லிம்கள் இன்னும் முழுமையாக மீளக்குடியமர்த்தப்படவில்லை. முஸ்லிம்கள் அங்கு மீள்குடியேற உரித்துடையவர்கள். புலிகளினால் அகதியாக்கப்பட்டவன், அந்த மாவட்டத்தின் பிரதிநிதி, அந்த மாவட்ட மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர் என்ற அடிப்படையில் மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன் வடக்கு முஸ்லிம்களையும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் தொடர்பிலும் பொதுபல சேனா வெளியிட்டுள்ள கூற்றுக்களை கண்டிக்கிறேன்.
அவர்கள் அடிப்படை ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். முஸ்லிம்களையும், தமிழர்களையும், முஸ்லிம்களையும், கிறிஸ்த்தவர்களையும் மோதவிட்டு, தென்னிலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவே பொதுபல சேனா இப்போது புதுக்கதை சொல்லியுள்ளது.
தேசிய விவகாரங்களிலும், நெருக்கடிகளிலும் தற்போது முஸ்லிம்கள் ஒன்றுபட்டுள்ளனர். தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசியல் பேதங்களை மறந்து கைகோர்த்துள்ளனர். இந்நிலையில் பொதுபல சேனா மிகத்தந்திரமாக இந்த ஒற்றுமையை குலைக்க முயலுகிறது. வடக்கில் முஸ்லிம்களுடன் ஏனைய சமூகங்களை மோதவிட்டு நாடு பூராகவும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதும் இதன் நோக்கமாக இருக்கலாம்.
பொதுபல சேனாவின் குற்றச்சாட்டுக்களுக்கு மிக தெளிவான விளக்கத்தை வழங்க தயாராகவுள்ளேன். ஆம், அவர்களை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறேன். இறைவன் துணையுடனும், முஸ்லிம் சமூகத்தின் ஆதரவுடனும் இந்த விவாதத்தை எதிர்கொள்ள தயார்.
ஜனாதிபதி செயலணி ஆணையாளர் திவாரத்தினா கூட, வடக்கில் முஸ்லிம்கள் மீளக்குடியமர காணிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். வடக்கு முஸ்லிம்களின் காணிகளை பாசிசப் புலிகள் களவாடி தமிழ் மக்களுக்கு விற்றுவிட்டனர். இப்போது முஸ்லிம்கள் மீளக்குடியமர காணிகள் இல்லை. அவர்களுக்கான காணிகளை அரசாங்கமே வழங்கிவருகிறது. அதற்கு அரசாங்கமே பொறுப்பாகவும் உள்ளது.
எந்தவொரு பொதுமகனின் காணியையும் களவாடி அதில் வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தவில்லை என்பதை சகல தரப்புகளும் புரிந்துகொள்ள வேண்டும். இதைவிடுத்து வடக்கில் அடிப்படைவாதிகள் மீள்குடியமர்த்தப்படுகிறார்கள், அதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் உதவுகிறார்கள் என்று கூறுவதெல்லாம் சுத்தப்பொய். பொதுபலசேனாவின் இந்த நிலைப்பாட்டை சமாதானத்தை விரும்பும், இன ஐக்கியத்தை நேசிக்கும் சகல தரப்புகளும் கணடிக்க வேண்டுமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்,
5 comments :
பாசிசப்புலிகள் முஸ்லிம்களின் காணிகளைக் களவாடி தமிழருக்கு விற்றுவிட்டனராம். காணி என்ன காரா நகையா களவாடி விற்பதற்கு. அவ்வாறு விற்கப்பட்ட ஒரு காணியை அவரால் காட்டமுடியுமா? புலியின் பெயரைச் சொல்லி முஸ்லிமுக்கு காணி கொடுக்கிறார் என்றால் இவங்களுக்கு பொதுபலசேனாதான் சரி.
//புலியின் பெயரைச் சொல்லி முஸ்லிமுக்கு காணி கொடுக்கிறார் என்றால் இவங்களுக்கு பொதுபலசேனாதான் சரி.//
உலக பயங்கரவாதிகள் புலியின் பெயரைச் சொல்லி றிசாத் பதியுத்தீன் அநீதியாக காணி கொடுக்கிறார் என்றால் அதற்க்கு சரியான தீர்வு பொதுபலசேனா மட்டுமே.
பொது பல சேனாவின் மறைமுக அங்கத்துவ மகிந்த சகோதரர்களின் நோக்கமெல்லாம், கிழக்கு மாகாணம் போல், வட மாகாணமும் முஸ்லிம் கைகளில் கைகளில் போய்விட்டால், வரும் காலங்களில் இலகுவாக வட, கிழக்கில் தமிழ்,முஸ்லிம் மக்களை மோதவிட்டு, ஒட்டுமொத்த சிறுபான்மை இனத்தையே இலங்கையிலிருந்து, முற்றாக இல்லது ஒழித்து விடலாம் என்பதே.
அதன்படி சில எடுபிடி அமைச்சர்களின் செயல்பாடுகள் எல்லாம், தங்கள் எஜமாங்களின் கட்டளைப்படி நடந்து, திட்டங்களை நிறைவேற்றி, எதிர்வரும் வடமாகாண தேர்தலில் தனக்கு முஸ்லிம் வோட்டுக்களை கூட்டி, வடமாகாண முதலமைச்சராக வரும் பகல்கனவே தவிர, வேறு ஒன்றும் இல்லை.
இவற்றுக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் இடம் கொடுக்கக் கூடாது. நாம் எங்களுக்குள் நேர்மையாக, நீதியாக, ஒற்றுமையாக நடக்க வேண்டும்.
உண்மையில், வன்னியில் கடைசி கால யுத்தத்தில், மற்றும் சுனாமி அழிவுகளின் போதும், மிகவும் துன்பங்களையும், இழப்புக்களையும் சந்தித்த வன்னிமக்களுக்கே முதலில் காணிகள் வழங்கும் விடயத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
அதுவே நேர்மை, நீதி, நியாமானது.
எனவே, நாம் எல்லோரும் மிகவும் சிந்தித்து,நேர்மை, நீதி, நியாமாகவும், எச்சரிக்கையாகவும் செயல்படுவோமாக.
வன்னி மக்கள்.
" உண்மையில், வன்னியில் கடைசி கால யுத்தத்தில், மற்றும் சுனாமி அழிவுகளின் போதும், மிகவும் துன்பங்களையும், இழப்புக்களையும் சந்தித்த வன்னிமக்களுக்கே காணிகள் வழங்கும் விடயத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்."
அதுவே நேர்மை, நீதி, நியாமானது.
Really acceptable.
Unkal makkalukku innum alivu athikam nichchayam. Saakum pothu evvalavu nilathai unkaludan eduththu sellap poreenka ebru naamum paarkathaane pokirom. Unkal kunathinaal thaan seththaalum kaavam maddum thaan unkalin pinaththukku thakuthi.
Post a Comment