எங்கள் ஜனாதிபதி இன்னும் இருமுறை ஜனாதிபதியாக இருப்பார்! - நிசாந்த
’71 ஆவது வயதில் ஜே.ஆர். ஜயவர்த்தன ஜனாதிபதியாகி, 82 வயதில் ‘பென்சன்’ எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார். சந்திரிக்கா அம்மையார் இருமுறை ஜனாதிபதியாக இருந்துவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
என்றாலும் எங்களது ஜனாதிபதி யாப்பை மாற்றக் கூடிய முறையொன்றைக் கொண்டுவந்து, ஜனாதிபதியாக எத்தனைமுறையும் போட்டியிடலாம் என அரசியல் யாப்பை மாற்றிக்கொள்ளலாம்.அதனால் எங்கள் ஜனாதிபதி இன்னும் இருமுறை ஜனாதிபதியாக இருப்பார்’ என பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம குறிப்பிட்டார்.
பத்தேகமையில் இடம்பெற்ற ‘தேசத்தை உயர்த்தும் நீல அலை’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர்,
‘ஜனாதிபதி 60 இலட்சம் வாக்குகளைப் பெற்றபோதும், உறுப்பினர்களாக இருப்பவர்கள் 6 இலட்சம் பேர் மட்டுமே! எனவே, கட்சி உறுப்பினர்களை அதிகரிப்பதற்காக வேலைத் திட்டத்தை முன்னெடுத்தோம். அதேபோல கட்சிக்காக புதியதொரு தலைமையகமொன்றை நிர்மாணித்துக்கொண்டிருக்கிறோம். உறுப்பினர்கள் அனைவரினதும் பெயர், முகவரி, தொடர்பாடல் இலக்கம் என்பன அங்கிருக்கும். தேவையான போது வீட்டிற்கே கதைக்க க்கூடிய வசதியுள்ளது.’ என்றும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
2 comments :
As Mr.Nisantha Muthuhettigama said,we need a strong personality as a president to defend the country,save the country and to lead the country into prosperity.So among
all Hon.MR is the suitable person for the job.
He is capable of facing all the challenges
Post a Comment