தமிழக மாணவர்களின் போராட்டத்தை அமெரிக்காவே நடாத்துகின்றது. கண்டுபிடித்தார் குணதாச அமரசேகர!
ஆதரவாக என இந்திய தமிழகத்தில் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டங்கள் தமிழக அரசியல் தலைவர்களின் அரசியல் நிகழ்சி நிரலில் இயங்குகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் நிலவிவரும் சந்தர்ப்பத்தில் புதியதோர் குண்டை தூக்கிப்போட்டுள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர.
அவர் 'தமிழகத்தில் இடம்பெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ செயல்படுகிறது' என குற்றஞ்சுமத்தியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், 'தமிழகத்துடன் அமெரிக்காவுக்கு பிரத்தியேக உறவுகள் உள்ளன. அண்மையில் முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளின்டன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியிருந்தார்.
தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் சாதாரண மக்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் அல்ல. இலங்கையில் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தில் மிகவும் திட்டமிட்டு செய்யப்படும் சூழ்ச்சித் திட்டமாக இதனைக் கருத வேண்டும்.
ஜெயலலிதா சிறந்த நடிகை என்ற போதிலும், கூர்மையான புத்தி உடையவரல்ல. அவரை அறியாமல் அவர் சி.ஐ.ஏ.வின் சூழ்ச்சி வலையில் வீழ்ந்திருக்கலாம்.
சீனா, மற்றும் இந்தியாவின் எழுச்சி காரணமாக அமெரிக்கா வலுவிழந்து செல்கின்றது. எனவே ஆசிய பிராந்திய வலயத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதை அமெரிக்கா விரும்புகின்றது. தமிழகத்தில் தனி ஈழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு குழப்பங்கள் ஏற்பட்டால், அது அமெரிக்காவுக்கு சாதகமாகவே அமையும்' என்றும் தெரிவித்துள்ளார்.
1 comments :
Why not we accept Mr Gunadasa Amarasekara`s prediction.Why not you look around the world,what was happened and what is happening,sometimes the ending of some matters entirely predictable.
Post a Comment