Saturday, April 6, 2013

அதிபர், ஆசிரியரின் தவறான வழிநடத்துதலால் பல்கலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் யாழ்.மாணவிகள்

யாழில் மானிப்பாயில் உள்ள பிரபல்யமான பாடசாலையில் தோற்றி க.பொ.த உயர்தரத்தில் சத்தியடைந்த இரு மாணவிகள் அதிபர், ஆசிரியர்களின் தவறான வழிநடத்தல்களால் பல்கலைக்கழகத்தினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பாடசாலையில் கல்வி கற்ற இரண்டு மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதற்கான புள்ளிகளைப் பெற்ற போதும் அவர்கள் பொது விவேகப் பரீட்சையில் குறைந்தளவு புள்ளிகளைப் பெற்றதால் இரண்டாம் தரம் பொது விவேகப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு மாணவிகள் பாடசாலை ஊடாக விண்ணப்பித்த போதும் அவர்களது பரீட்சை அனுமதி அட்டைகளை பாடசாலை அதிபர் கொடுக்க மறுத்துள்ளதோடு மாணவிகளையும் கடுமையாக அச்சுறுத்தியதால் இதனால் மாணவிகள் பரீட்சைக்கு தோற்றவில்லை.

இந்நிலையில் தற்போது இந்த மாணவிகள் இருவரையும் மூன்று தடவைக்குள்ளாக பொது விவேகப் பரீட்சையில் சித்தியடைந்த பெறுபேற்றை அனுப்பி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதால் மாணவிகள் இருவரும் மீண்டும் இரண்டாம் தரம் பரீட்சைக்கு தோற்றினால் பாடசாலையின் பெறுபேற்று விகிதாசாரம் வீழ்ச்சியடைந்து விடும் என அதிபரும் ஆசிரியர்களும் மாணவிகளை அச்சுறுத்தியதால் இரண்டாம் தரம் பரீட்சைக்க தோற்றுவதற்கு அனுமதிக்கவில்லையென்று மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

4 comments:

  1. Head of this particular school is holding responsible for this sabotage
    These type of saboteurs should be eliminated from this type of responsible jobs.Before you cry for something else just wipe out this narrow and selfish minded people from the responsible positions.knowingly or unknowingly we have this type of narrow minded guys
    in decades and decades.This is really a curse for our society.How many students were left on the cross roads,as a result of this narrow minded gus who were and who are holding responsible positions

    ReplyDelete
  2. ஏற்கனவே நடந்து முடிந்த யுத்தங்களும், இழப்புக்களும் பல்கலைகழக தரப்படுத்தல், வேலை வாய்ப்பு புறக்கணிப்பு என்ற அடிப்படை பிரச்சனைகளை கொண்டதை எவரும் முதலில் உணரவேண்டும். இதை கண்டும், அனுபவித்தும், புரிந்து நடக்க தெரியாத அதிபர், ஆசிரியர்கள்களே உண்மையில் விவேகம் குறைந்தவர்கள். அது மட்டுமல்ல அவர்களே நமது துரோகிகளும் ஆவர்.

    ReplyDelete
  3. Teachers are the next guidance after parents,but how to say unfortunate
    children always face difficulties.This is not only now from those days onwards. Favouritsm,nepotism,partiality,negligience,ignorance etc etc are very common in schools too.

    ReplyDelete
  4. Egoists and jealousy minded guys cannot be teachers because It has long long unforgettable saddened stories, happened to the unfortunate children

    ReplyDelete