மின்சாரத்துக்காக செலவு அதிகரிப்புக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் அரசாங்கமும், அதனுடன் தொடர்புடையவர்களுமேயாவர் என ஜாதிக்க ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.
அந்தக் கட்சியின் தலைவர் கலாநிதி ஓமல்பே ஸோபித்த தேரரின் கையொப்பத்துடன் கூடிய அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இதுகாலவரை எந்தவொரு அரசாங்கத்தாலும்அதிகரிப்படாதவாறு தற்போதைய அரசாங்கம் மின்சாரக் கட்ணைத்தை அதிகரித்துள்ளது. அண்ணளவாக 30% அதிகரித்துள்ளது. அனைத்துப் பாவனையாளர்களினதும் கட்டணங்கள் சம அளவாக இல்லை. மிகக் குறைந்த அளவிலும், வீண்விரயமாகாமல் மின்சாரப் பட்டியலுக்கான கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளும் நோக்கிலும் உபயோகப்படுத்துகின்ற ஏழைகளின் மின்சாரப் பட்டியலானது 50-120% ஆக உயர்த்தப்பட்டுள்ள அதேவேளை, சிறுகைத்தொழிலாளர்களின் மின்பட்டியலுக்கான தொகை 20% இனாலும் அதிகரிக்க்ப்படும் மின்கட்டணம் 8-9% உயர்த்ப்பட்டுள்ளது. பாரியளவு கைத்தொழிலாளர்களின் தொகை 5% இனாலேயே அதிகரித்துள்ளது. அதனை ஏற்றுக்கொள்ளவியலாது.
இந்த வருடம் மின்சாரசபை பாரிய நட்டமொன்றை சந்தித்துள்ளது. அதற்குக் காரணம் ஒன்று உள்ளது. அதாவது, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கை மின்சாரத் திணைக்களத்துக்குப் பெற்றுத்தருகின்ற பெற்றோலியத்தின் விலை இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து லீட்டருக்கு ரூபா 65 முதல் 90 வரை உயர்ந்துள்ளமையாகும். அந்த விலையேற்றத்தினால், மின்சாரத் திணைக்களம் மேலதிகமாக 33 பில்லியன் ரூபாய்களை செலவளிக்க வேண்டியுள்ளது.
அதனால் 2013 ஆம் ஆண்டு மின்சாரப் பட்டியலில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்த தேவைகிடையாது இவ்வாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எண்ணெய்யின் விலையை அதிகரிப்பதற்குக் காரணம், உலக சந்தையில் எண்ணெய்யின் விலை அதிகரிப்புக் காரணமல்ல. ரூபாவின் விலை குறைந்தமையே ஆகும். அதனால், இந்த அசாதாரண நிலைக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் இலங்கைப் பொருளாதாரத்தை அழித்து, கட்டியிழுத்துச் சொல்லும் அரச உத்தியோகத்தர்களே ஆவர். அவ்வாறின்றி சாதாரண அப்பாவிப் பொதுமக்கள் அல்லர்.
அதனால்தான், அரசாங்கத்தை பிரச்சினைக்குள்ளாக்கும் இப்படியான விசமத்தன நடவடிக்கைகளை அரசாங்கம் கருத்திற்கொண்டு, பொதுமக்களை மென்மேலும் துன்பத்திற்குள் ஆளாக்காது மறுசீரமைக்கப்படவுள்ள கட்டணத்தை இல்லாமற் செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மின்சாரப்பட்டியல் கட்டணத்தை உயர்த்துவதை நிறுத்த வேண்டும்.
(கேஎப்)
No comments:
Post a Comment