Saturday, April 20, 2013

மக்கள், மின்சாரப் பட்டியலைச் செலுத்த வங்கியொன்று அமைக்க வேண்டிவரும்.... - அஸாத் ஸாலி

‘அமைச்சரவையில் மின்சாரப் பட்டியல் பற்றி பேச்சு எடுக்கும்போதே நாங்கள் அதுபற்றி அபாய மணியடித்தோம். மின்சார அமைச்சரை மாற்றி, திட்டமொன்று தீட்டி, மின்சாரப் பட்டியலின் விலையை உயர்த்துவதற்காக பவித்ராவை நியமித்து வைத்தார்கள் ஆப்பு’ என கொழும்பு முன்னாள் பிரதி நகராதிபதி அஸாத் ஸாலிகுறிப்பிட்டார்.

மின்சாரக் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போது, ‘மின்குமிழ்கள் 3 இனைப் பற்றவைத்து, வீட்டில் மற்றொரு மின்விசிறியை பயன்படுத்துபவருக்கு எப்படியும் 90 அலகுகளுக்கு மேலாகச் செல்லும். அதற்காக அவர் தற்போது மின்சாரக் கட்டணத்துக்காக இன்னும் ரூபா 1300 தேட வேண்டிவரும். அவ்வாறாயின் அவர்களது சம்பளம் இன்னும் 3000 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும். ஆயினும் அவ்வாறு ஆகின்றதா? தற்போது அரச ஊழியர்கள், சாதாரண பணிகளில் அமர்ந்துள்ளோர் அனைவரும் இராணுவத்தினர், பொலிஸார் போல இலஞ்சம் பெற்று வங்கிகள் கட்டுவது போல இலஞ்சம் பெறவும் வங்கிகள் நிர்மாணிக்கவும் வேண்டும்.

2011 ஆம் ஆண்டு மின்சாரத் திணைக்களத்திற்கு ரூபா 173 பில்லியன் நட்டமேற்பட்டது. 2012 ஆம் ஆண்டு ரூபா 386 பில்லியன் நட்டமேற்பட்டுள்ளது. எவ்வளவு பணம் விரயமாகின்றது? இந்நாடு நெறிபிறழ்ந்தது என்று இன்று ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களே எங்களிடம் கூறுகிறார்கள். இந்த அரசாங்கத்தைப் போல இந்நாட்டில் எந்தவொரு அரசாங்கமும் இருந்ததில்லை. முன்னர் திருட்டுத்தனமாகச் செய்தவை இப்போது வெட்டவெளிச்சத்தில் செய்யப்படுகின்றன’ என்றும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

No comments:

Post a Comment