Friday, April 5, 2013

பிரபலத்துக்காகத் துள்ளும் சில பௌத்த துறவிகள் போன்ற கலகக்காரர்கள் வேறு யாருமில்லை.! - மகிந்த யாப்பா

‘இன்று வீதிக்கு இறங்கி பெரிதாகப் பேசுகின்ற, எதிர்ப்பு ஊர்வலம் நடாத்துகின்ற, மத வழிபாட்டுத் தலங்களுக்குள் தன்னிச்சையாக நுழைந்து தொலைக்காட்சிகளில் காட்சியளிப்பதற்காக ஓலமிடும் எங்களுடைய பௌத்த துறவிகள் போர் நிகழ்வுற்ற காலத்தில் எங்கே இருந்தார்கள்? அரந்தலாவில் பௌத்த பிக்குகள் 69 பேர் கொலைசெய்யப்பட்ட போது எங்கிருந்தார்கள்? என்றாலும், இன்று முடிவில்லாமல் எதிர்ப்புப் பேரணிநடாத்துகிறார்கள், உரக்கக் கத்துகிறார்கள், ஏன்? அச்சமில்லை, அவற்றைச் செய்தால் விகாரைக்கு வரமுடியும் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். அவ்வாறின்றி இவர்களைப்போல் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பெயரைப் போட்டுக்கொள்ளத் துடிக்கின்ற கலகக்காரர்கள் வேறில்லை’ என்று விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

‘நாட்டை உயர்த்தும் நீல அலை’ எனும் பெயரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு மாத்தறை, வெலிகம, மிதிகம பிரதேசங்களில் நடைபெற்றபோது, அவற்றில் கலந்துகொண்டே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துரைத்த அமைச்சர் குறிப்பிட்டதாவது,

‘இன்று எங்கள் நாட்டுக்கு எதிராக எத்தனை எத்தனயோ உபாயங்கள் நடைபெறுகின்றன. இவற்றைச் செய்பவர்கள் நம்நாட்டவர்கள் அல்லர். பிறநாட்டவர்கள்தான் அவ்வாறு செய்கிறார்கள். என்றாலும், அவற்றுக்கு எமது நாட்டவர்கள்தான் ஒத்தாசை புரிகிறார்கள்.

இன்று பலம்பொருந்திய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் எங்கள் ஜனாதிபதியைப் பார்த்து, ‘நீங்கள் இதுவரை செய்ததுபோதும், உங்கள் ஒரு சகோதர்ரையேனும் பிறருக்குக் கொடுத்து ஒதுங்கியிருங்கள், அவ்வாறில்லாவிட்டால் அங்கிருந்து விலகி வேறு ஏதாவது பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

(கலைமகன் பைரூஸ்)

1 comments :

Anonymous ,  April 6, 2013 at 10:38 AM  

Buddhists monks also human beings when a buddhist monk being assulted in another country´s soil,how you would feel.The particular monk went to the Indian temple in order to research studies,but he was dashed and kicked like a football by the unruly crowd,afterall HE was a Rev Buddhist monk who is doing his higher studies.We should know to respect each everyones feelings

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com