கிளிநொச்சி உருச்சபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும்,அவரது மனைவி மக்களும் உல்லாசமாக வாழ்ந்ததாகக் கூற்ப்படுகின்ற நிலக்கீழ் உல்லாச விடுதியை கண்டுபிடிப்பதற்காக இராணுவத்தினரும்,கொழும்பிலுள்ள பயங்கரவாதிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடிய பிரிவினரும் இணைந்து தேடலில் இறங்கியுள்ளதாக பாதுகாப்பு பிரிவினரிடமிருந்துதகவல்கள் வந்துள்ளன.
இந்த நிலக்கீழ் விடுதியின் ஒருபகுதியில் சிறியதொரு உலங்குவானூர்தி, குண்டு துளைக்காத வாகனமொன்று, ஏவுகணைகள் சிலவும் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
யுத்தக் காலப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டு துன்புறுத்தலுக்குள்ளான பொதுமக்கள் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளதாக அறியவருகின்றது.
உருச்சபுரத்தில் இந்த நிலக்கீழ் விடுதியுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியில் தேடல்கள் நடாத்தும்போது பாரியதொரு ‘காங்கிரிட்’ தட்டு வெளிப்பட்டுள்ளதாக கிளிநொச்சியிலிருந்து பாதுகாப்புப் பிரிவினரிடமிருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி மற்றும் பிள்ளைகளுடன் 2008 ஆம் ஆண்டுவரை இங்குதான் உல்லாசமாக வாழ்ந்துவந்தார் என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன என சிரேஷ்ட பாதுகாப்பு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
(கேஎப்)
WORLDS TERRORIST,SHOLD NOT be not given by me any ecscuse! LTTE PRABA is a MAD person, where he was allways in underground!
ReplyDeleteWhatever is, the LTTE chapter is already closed. But, the government still want to find some excuses to avoid resolving the fundamental problems.
ReplyDelete