மேல் மாகாண வீதிப் பயணப் போக்குவரத்து அதிகார சபையின் பூரண ஒத்துழைப்புடன் தன்னுடைய கருத்திற்கேற்ப சங்கத்தின் ஒத்துழைப்போடு செயற்படுத்தவுள்ள தனியார் பஸ் வண்டிகளுக்கு முற்கொடுப்பனவு அட்டைகளை மே மாதத்திலிருந்து வழங்கி, நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
முற்கொடுப்பு அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட வேண்டி மட்டுமே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதற் கட்டமாக, மேல் மாகாணத்தில் புறக்கோட்டை - ஹோமாகம, புறக்கோட்டை - அளுத்கம, கொழும்பு - கம்பஹா வீதிகளில் பயணிக்கும் பஸ் வண்டிகளுக்கு இது வழங்கப்படும். பின்னர், மாகாணத்தின் ஏனைய வீதிகளுக்கும் இத்திட்டம் அமுல்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து னைய மாகாணங்களுக்கு இந்தச் சேவை முன்னெடுக்கப்படும் எனவும் விஜேரத்ன குறிப்பிட்டார்.
சிறந்த்தொரு திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற இந்த முற்கொடுப்பனவு அட்டை முறை நாணயக் குற்றிப் பிரச்சினைகளுக்கும், பஸ் உரிமையாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழியென்றும் அச்சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
No comments:
Post a Comment