Tuesday, April 30, 2013

தேர்தலில் போட்டியிட வந்த முஷாரப் தேர்தல் தினத்தில் வீட்டுக் காவலில் இருக்கும் நிலை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பரில் ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியின் போது வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார். அப்போது, ஜனாதிபதியாக இருந்த முஷாரப் போதிய அளவு பாதுகாப்பு கொடுக்காததால்தான் இச்சம்பவம் நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

இவர் மேல் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் 57 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பாகிஸ்தானைவிட்டு வெளியேறி பல நாடுகளில் வாழ்ந்து வந்த முஷாரப், பாகிஸ்தானில் வரும் மே 11-ம் திகதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு திரும்பினர்.

அப்போது, 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்த வழக்கில் வழக்கில் முஷாரப் கைது செய்யப்பட்டு 2 வார வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இந்த காவல் மே 4-ம் திகதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ராவல்பிண்டி நீதிமன்றம் பெனசீர் புட்டோ கொலை வழக்கில் அவரை மே 14-ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் தினத்தின் போதும் அவர் வீட்டுக் காவலில் இருப்பார் என தெரிகிறது.

No comments:

Post a Comment