Thursday, April 4, 2013

டுபாயிலிருந்து திருப்பி அனுப்பப்படவுள்ளவர்களில் இசைப்பிரியாவின் நண்பியும் அடங்குகின்றார்.

தூத்துக்குடி துறைமுகத்தினூடாக, அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முற்பட்டபோது, டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட 19 பேரையும் அந்நாட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர். இவர்களை இலங்கைக்கு நாடு கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டுமென, தமிழ்நாட்டில் உள்ள புலி ஆதரவாளரான வை.கோ. இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வைகோ வின் இச்செயற்பாடு குறித்த நபர்களை புலிச்சந்தேக நபர்களாக்கி உள்ளது.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்படுவோர் இலங்கையினுள்ளும் வெளியேயும் கைது செய்யப்படுவதும், பின்னர் விடுதலை செய்யப்படுவதும் வழமையாக இடம்பெற்று வருகின்ற செயற்பாடுகள். ஆனால் குறித்த 19 பேர் தொடர்பில் வைகோ இந்திய பிரதமருக்கு எழுதியதன் மூலம் இவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்புகள் உண்டா? என்ற கோணத்தில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இவ்விசாரணைகளிலிருந்து கைது செய்யப்பட்டுள்ள 19 பேரில் கரினி எனப்படுகின்ற புலிகளின் செய்தி அறிவிப்பாளர் ஒருவரும் அடங்குவதாகவும் அவர் இசைப்பிரியாவின் சகா எனவும் அறியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
.

1 comments :

Anonymous ,  April 4, 2013 at 7:29 PM  

தப்பியிருக்கும் புலிகளையும் காட்டிக்கொடுத்து, அவர்களை சங்கடத்தில் மாட்டி விட்டு, அதை வைத்து தமிழகத்தில் வானரங்களை கூட்டி அரசியல் நடத்தலாம் என்ற சுயநல நோக்கம் கொண்ட தமிழக அரசியல் கோமாளிகள் தான் உண்மையில் தமிழின துரோகிகள் என்பதை சிந்தனையுள்ள தமிழ் மக்கள் நன்கு அறித்துள்ளனர்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com