Thursday, April 18, 2013

முஸ்லிம்களைக் கொன்றோருக்கு தூக்குத்தண்டனை வழங்குக! - நரேந்திரமோடி

நரேந்திரமோடி ஒரு நயவஞ்சகன் என வெடிக்கிறார் எஸ். ஹமீத்

நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணின்( கௌஸர் பீபீ) வயிற்றை சூலாயுதத்தால் கிழித்துக் கொன்று, அவளது குழந்தையை வெளியே உருவியெடுத்து, நெருப்பில் போட்டு எரித்த சம்பவத்தோடு, இன்னும் முஸ்லிம்களுக்கெதிரான அநேக கொலைகளும் கொடுமைகளும் நடந்தேறிய குஜராத் கலவரத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மனித குலம் வெட்கித் தலை குனியுமளவுக்கு, 2002ம் ஆண்டில் முஸ்லிம்களுக்கெதிராக நரேந்திர மோடியின் அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட அந்தக் கொடூரங்களையும் அட்டுழியங்களையும் பட்டியலிடப் போனால், அதற்குப் பல நாட்கள் தேவைப்படும்.

பின்னணியில் மோடி இருந்துகொண்டு, இந்து வெறியர்களையும் கூலிப்படைகளையும் கொண்டு குஜராத்தில் ஆடிய வெறிச் செயலை, இன-மத பேதங்களுக்கு அப்பால் நின்று இந்திய தேசமே எதிர்த்தது. இங்கு இந்திய தேசமென்று சொல்வது, இந்திய தேசத்தில் வாழ்கின்ற அதிக எண்ணிக்கையான மனச்சாட்சியுள்ள மக்களைத்தான்.

குஜராத் வெறியாட்டம் தொடர்பாக ஒரு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடந்தன. இதில், கலவரத்தில் நேரடியாகவே ஈடுபட்டு அப்பாவி முஸ்லிம் மக்களைக் கொன்றார்கள் என்றும் கொல்லத் தூண்டினார்கள் என்றும் மோடியின் அமைச்சரவையில் அமைச்சர்களாகவிருந்த கோட்னானி(பெண் அமைச்சர்) மற்றும் பாபு பஜ்ரங்கி என்பவனோடு மேலும் 10 பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்ததனால், இவர்களுக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் 22 பேர்களுக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கௌஸர் பீபீயைக் குத்திக் கொன்று, அவள் வயிற்றைப் பிளந்து குழந்தையை எடுத்து நெருப்பில் போட்டு எரித்ததை தெகல்கர் நீதிமன்றத்தில் பகிரங்கமாகப் பஜ்ரங்கி சொன்னபோது, பாரத தேசத்தின் பண்புள்ள மக்கள் மட்டுமல்ல, உலகத்தின் உணர்வுள்ள மக்கள் அனைவருமே அதிர்ந்து போனார்கள்.

இப்பொழுது 28 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 10 பேருக்கும் அவர்களின் தண்டனையைத் தூக்குத் தண்டனையாக மாற்ற நீதிமன்றத்தைக் கோரும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் கோரிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது. அனுமதியை வழங்கியிருப்பதே நரேந்திர மோடியின் அரசாங்கம்தான் என்பதுதான் வேடிக்கை.

ஆக, பஜ்ராங்கியையும் கோட்னானியையும் மோடி கைவிட்டதோடு மட்டுமல்லாமல் கழுத்தையும் அறுத்து விட்டார் என்பது தெளிவாகியுள்ளது. நம்பியவனைக் கைவிட்டவன் நயவஞ்சகன் அல்லவா...! அப்படியானால் நரேந்திர மோடியும் ஒரு நயவஞ்சகன்தானே...!

No comments:

Post a Comment