கருணாநிதி எல்ரிரிஈ இயக்கத்தின் சிரேஷ்ட பேச்சாளராக செயல்படுவதாக அமெரிக்க தூதரகம் அறிவிப்பு. விக்கிலீக்ஸ்
சென்னை அமெரிக்க கவுன்சிலர் அலுவலகத்தினால் புதுடில்லியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் மற்றும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் திணைக்களத்திற்கு 1989 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட கேபல் தகவலில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புலிகளின் சிரேஸ்ட ஊடகப்பேச்சாளராக செயற்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேநேரம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எல்ரிரிஈ இயக்கத்தின் அச்சிறுத்தல்களுக்குட்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. எல்ரிரிஈ இயக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு செயல்பட்டு இலங்கையில சீர்குலைந்த தமிழ் அமைப்புக்கள் ஊடாக தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றுக் கொள்ள கருணாநிதி செயல்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தமிழீழ இராச்சியத்தினை தாபிக்க கருணாநிதிக்கு தேவை இருக்கவில்லையென்றும் சென்னை அமெரிக்க கவுன்சிலர் அலுவலகத்திற்கு அனுப்பிய கேபல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்ரிரிஈயுடன் இணைந்து இலங்கை மீது அழுத்தங்களை திணிப்பதே இவர்களின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜூவ் காந்தியை எல்ரிரிஈயினர் கொலை செய்யும் வரை இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக செயல்பட்டு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நல்லுறவினை சீர்குலைக்க கருணாநிதி செயல்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.
வேறொரு தரப்பினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே கருணாநிதி தமிழ் மக்களுக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிடுவதாகவும் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.
தமது தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக ஒரு சிலர் கருணாநிதியை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் ஈழம் தொடர்பாக கனவு காணும் கருணாநிதி இந்திய மத்திய அரசு மற்றும் தமிழகத்திற்கு இடையிலான தொடர்பிற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவதாக சென்னையிலுள்ள அமெரிக்க கவுன்சிலர் அலுவலகம் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் மேலும் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment