தாய்லாந்தில் 100ற்கும் அதிகமான ஏ.ரி.எம். அட்டைகளில் 10 மில்லியன் பாத் பெறுமதியான பணத்தை மோசடிசெய்த இரண்டு இலங்கையர் உட்பட ஆறு பேர் கொண்ட குழுவொன்று தாய்லாந்தின் பொருளாதார மற்றும் சைபர் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு இலங்கையரும் நான்கு மலேசியர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக பாங் கொக் செய்திகள் தெரிவிப்பதுடன் சிஆம் வர்த்தக வங்கி வழங்கிய தகவலையடுத்தே இக்குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து ப்ரட்டுனம் என்ற பிரதேசத்தில் உள்ள ஏ.ரி.எம் இயந்திரத்தில் சசீலன் என்பவர் (வயது43) பணத்தை மீளப்பெற்றுக்கொண்டிருக்கும்போது பொலிஸார் கைது செய்ததுடன் இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத்தொடர்ந்து இந்த மோசடியுடன் தொடர்புடைய 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து வைபர் குற்றப்பிரிவால் சசீலன் (வயது43), சுதர்சன் நடராஜா (வயது34) ஆகிய இரண்டு இலங்கையரும், தசிகுமார் அந்தோனிசாமி (வயது32) ஈஸ்வரன் குமாரன் (வயது20) ஜோதி சங்கர் தியாகு (வயது19) தொரைசாமி (வயது19) ஆகிய 4 மலேசியர்களுமே தாய்லாந்துப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களும் முன்னாள் விடுதலைப் புலிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர்கள் 162 ஏ.ரி.எம். அட்டைகளில் 18,000 பாத் பணத்தை மோசடி செய்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மலேசியாவிலிருந்து வெற்று ஏ.ரி.எம் அட்டைகளைப் பெற்று கனடா, லண்டன் மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளிலுள்ளவர்களின் வங்கிக் கணக்குத் தகவல்களைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்றிருப்பதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அது மட்டுமல்லாது ஒரு மாத காலப்பகுதியில் 10 மில்லியன் பாத் பெறுமதியான பணத்தை மோசடி செய்திருப்பதாக கைதுசெய்யப்பட்ட குழுவினர் ஒத்துக்கொண்டுள்ளனர்.
என்ன இருந்தாலும் தமிழர் இதில் கெட்டிக்காரர். ஆனால் மானம் போகுது ஐயா. Drammen
ReplyDelete