இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருத்தி, ஸவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக வேலைசெய்து கொண்டிருக்கும்போது, வீட்டு எஜமானி அந்தப் பெண்மணியை நிர்வாணமாக்கி நிழற்படங்கள் எடுத்துவிட்டு நன்கு கசையடி கொடுத்துள்ளதாக அறியவருகின்றது.
பின்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ள அந்தப் பெண்மணி, நிவாரணம் பெறுவதற்காக கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலி கட்டுகொடை லுணுவில எனும் இடத்தைச் சேர்ந்த நூர் ஸவுரா ருவினா எனும் 45 வயதுடைய பெண்மணி, 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு மருதானையில் அமைந்துள்ள தொழில் முகவர் நிலையமொன்றின் மூலமாக ஸவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.
அங்கு அவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்து கொண்டிருக்கையில் வீட்டு உரிமையாளரின் மனைவியும், அந்த எஜமானிப் பெண்ணின் சகோதரி ஒருத்தியும் இணைந்து இலங்கையைச் சேர்ந்த அந்தப் பெண்ணை நிர்வாணமாக்கி, கையடக்கத் தொலைபேசியொன்றினூடாக படங்கள் பிடித்துள்ளனர். பின்னர் அந்த வீட்டு எஜமானனும் அந்தப் பெண்ணை சரமாரியாக கசையினால் அடித்துள்ளான். அவ்வாறு துன்புறுத்தப்பட்டவுடன் உடனடியாக அங்கிருந்து ஓடிச்சென்று, அந்நாட்டு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
விடயங்களை ஆராய்ந்த ஸவுதி பொலிஸார் முன்னின்று உடனடியாக ருவினாவை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.
(கேஎப்)
It is really hard to understand why the government is allowing the labour gangs men and women to go to Saudi countres.It is a shame to our country
ReplyDeleteWhy not the Srilankan women rights organizations protesting against this shameful act by allowing men and women to go to Saudi countries.Money plays an important role in our daily life for that purposes we cannot go cheaper and slaves to Saudi oil masters.
Our Dailynews papers just giving us the informations,but how far these informations are serious,this should be considered by the Government specially the respected Hon.Minister He should take steps to stop this nonsense,poverty is inevitable but government can provide jobs to everyone specially to the poorones and feed them.This is what a people`s government can do to the people.
ReplyDelete