இந்திய வம்சாவளி பெண் வக்கீலின் அழகை புகழ்ந்ததற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கேட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றுபவர் இந்திய வம்சாவளி பெண கமலாஹாரிஸ். இவரது தாய் சியாமளா கோபாலன். சென்னையை சேர்ந்த டாக்டரான இவர் 1960-ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். கடந்த 2004, 2008 அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது வெளிப்படையாக ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்.
இந்நிலையில் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொண்டார். இந்த விழாவிற்கு கமலா ஹாரிசும் வந்திருந்தார். விழா மேடைக்கு வரவழைத்து கமலா ஹாரிசை ஒபாமா புகழ்ந்தார். அமெரிக்க சட்டத்தை நிலை நாட்டுவதில் மனோதிடம் மிக்கவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மற்றவர்களை விட அழகானவர் என்று புகழந்து தள்ளினார். பெண்ணின் அழகை பொதுமேடையில் வர்ணிப்பது அமெரிக்க அதிபர் பதவிக்கு உரிய செயல் அல்ல என்று ஊடகங்கள் ஒபாமாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜாய் கர்னே கூறுகையில் கமலா ஹாரிசை அழைத்து அவருடைய அழகை புகழ்ந்ததற்காக அதிபர் ஒபாமா மன்னிப்பு கேட்டார். எனது மேடைப்பேச்சில் தவறான நோக்கத்தில் நான் அப்படி பேசவில்லை. கமலா ஹாரிஸ் எனது நீண்ட நாளைய நண்பர், திறமையானவர் என்ற நோக்கத்தில் தான் நான் அப்படி பேசினேன் என்று ஒபாமா கூறினார் என்றார் ஜாய் கர்னே.
With your tongue in your cheek.
ReplyDelete