அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு - முக்கிய இடங்களில் பதற்றநிலை! (படங்கள் இணைப்பு)
அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் மூவர் பலியாகியுள்ளதுடன் 141 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் நடைபெற்ற மரதன் ஓட்டப்போட்டி முடியும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள்வெடித்துள்ளன. தொடர்ந்து ஜே.எம். கென்னடி நூலகம் அருகே மூன்றாவது குண்டும் வெடித்துள்ளது.
இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தின் போது மூவர் பலியானதுடன் 141 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் 25க்கும் மேற்பட்டோர் உடலின் பாகங்களை இழந்துள்ளதாகவும் வைத்திய வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை காணப்படுகின்றது. மேலும் அமெரிக்காவின் முக்கிய இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
இத்தாக்குதலின் பின்னணி யாதெனத் தெரியவில்லை. இத்தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம். காயமடைந்தவர்களுக்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம் என அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கீ-மூன் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
2 comments :
சந்தோசமில்லாத,கவலை தரக்கூடிய,மனிதாபிமானமில்லாத ஒரு செய்தி.உன்ப்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த பயங்கரம் செய்த பயங்கரவாதிகள் கடுமையாக தண்டிக்கபட வேண்டும்.புலம் பெயர் புலிகளை ஆதரிக்கும் அமெரிக்கா சிந்தித்து பார்க்க வேண்டும். அமெரிக்காவுக்குவந்தால் ரத்தம் இலங்கைக்கு வந்தால் தக்காளி சாறு கிடையாது.
Post a Comment