Saturday, April 13, 2013

கருணா-பிள்ளையான் மீண்டும் இணைய முயற்சி. தொடர் பேச்சுவார்த்தைகள்.

புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவராக இருந்தவர் கருணா எனப்படுகின்ற வினாயகமூர்த்தி முரளிதரன். இவர் புலிகளின் தலைமையுடன் முரண்பட்டு 2002ம் ஆண்டில் சுமார் 7000 கிழக்கு புலிகளுடன் அமைப்பிலிருந்து வெளியேறினார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் ஓர் அரசியல் கட்சியை நிறுவினார். இதே நேரத்தில் அவர் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக நாட்டிலிருந்து வெளியேறி இந்தியா பிரித்தானியா எனக்காலத்தை கழித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்த பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் கட்சியின் தலைமைக்கு கண்ணை வைத்தார். அதற்கு இலங்கையின் புலனாய்வுத்துறையும் பங்களிப்பு செய்ததது என்பது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம். தலைமையினை கைப்பற்றுவதற்காக கருணாவின் விசுவாசிகள், மற்றும் பிள்ளையான் தரப்பினர் என உள்ளே அடிபட்டு சுமார் நூற்றுக்கணக்கான உயிர்கள் பதவிப்போட்டிக்காக பலிகொடுக்கப்பட்டது.

இறுதியில் பிள்ளையான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை கைப்பற்றினார். கருணா சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார். அவருக்கு அக்கட்சியின் உபதலைவர்களில் ஒருவர் என்ற பதவியும் வழங்கப்பட்டது.

இவ்வாறு இரண்டாக பிளவுபட்ட கிழக்குப்புலிகள் தொடர்ந்து தங்களுக்குள்ளே மோதல்களையும் சேறடிப்புக்களையும் செய்து வந்தனர். இதன் விளைவுகள் இவர்களது அரசியல் பாதையில் பல பின்னடைவுகளை தந்தன.

தற்போது இரு தரப்பினரும் விபரிதத்தை உணர்ந்து மீண்டும் இணைந்து கொள்வதற்கான முயற்சிகள் ஈடுபட்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது. கடந்த சில வாரங்களாக கருணா – பிள்ளையான் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைகளின்போது, நாங்கள் புலிகளிலிருந்து பிரிந்து வந்து புலிகளை தோற்கடித்து இன்று சமாதானத்தை உரிவாக்கியுள்ளோம். நாம் உருவாக்கிய இந்த சாமாதான சூழ்நிலையை பயன்படுத்தி அருண் தம்பிமுத்து போன்றோர் இங்கு வந்து இலகுவாக அரசியலில் ஜெயியக் முனைகின்றனர் இதற்கு நாம் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும் என்றும் பேசப்பட்டதாம்.


1 comments :

Anonymous ,  April 15, 2013 at 11:42 AM  

Forget all your differences get together and do a good job to your province,this what you can easily achieve,rather than allowing others into the scene

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com