‘அந்தச் சேனை இந்தச் சேனை என்று கூறிக்கொண்டு இனங்களிடையே ஒற்றுமையை இல்லாதொழித்து நாட்டைக் குட்டிச்சுவராக்கும் வேலையை இந்த சேனாவினர் செய்கின்றனர். இப்படியானவர்கள் இருக்கும்போது நாம் எவ்வாறு எமது நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவது?’ என ஐக்கிய மக்கள் முன்னணியின் தென் மாகாண சபை உறுப்பினர் மேஜர் அஜித் பிரசன்ன குறிப்பிட்டார்.
பொதுபல சேனா இயக்கத்தினர் பயங்கரவாதக் கூட்டமாக இருப்பதனால் அதனை அவசரமாக தடை செய்யுமாறும் தென் மாகாண சபைக் கூட்டமொன்றில் அஜித் பிரசன்ன கேட்டுக்கொண்டார்.
‘இன்று நாங்கள் பிளவுபட்டிருக்கிறோம். பௌத்த மதகுருமார்களில் சிலர் தேசிய ஒற்றுமைக்காக பேசாமல் இருக்கிறார்கள் என பொதுபல சேனா இயக்கம் குற்றம் சாட்டுகிறது. பொதுபல சேனாவைத் தடை செய்யுங்கள். இவர்கள் பயங்கரவாதிகள் உடன் தடை செய்யுங்கள்’ என அவர் அக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.
(கேஎப்)
He is absolutely right.
ReplyDeleteThose senas are not real monks. They are terrorists with monks' uniforms. Sri Lanka is going to face another destructive, nasty war for sure.