Monday, April 8, 2013

வீட்டில் இருந்து கொண்டே உடல் எடையை குறைக்க

இன்றைய உலகில் ஆணும், பெண்ணும் குண்டு உடலை குறைக்க நடை பயிற்சி, உடற்பயிற்சின்னு உடல் வருத்துவதுடன் இன்னொரு பக்கம் ஆறு வாரங்களில் அழகான ‘இடை’ என்னு விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை, குறைக்க பணத்தை தண்ணியா செலவழிக்கறதும் உண்டு. ஆனால் இப்படியான சிரமம் இல்லாம, உடல் எடை குறைக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியா நாட்டில் இருக்கிற மெல்போர்ன் உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சேர்ந்து ஒரு ஆய்வை மேறகொண்டனர் இந்த ஆய்வின் முடிவில் குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது.

இவ்வாறாக கரைவதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுப்பதுடன் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன் உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. இவ்வாறு கரும்பை பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும் எனவும் இதனை பயன்படுத்துவதால் எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தது என குறிப்பிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com