Saturday, April 27, 2013

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினர் அனுமதியின்றி முகாமிற்குள் செல்ல முற்பட்டுள்ளனர்! பிரிகேடியர் ருவன்

உலகில் எந்தவொரு நாட்டிலுமே அனுமதியின்றி இராணுவ முகாமிற்குள் செல்ல முடியாது.

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். பலாலி விமான நிலையம் ஊடாகவே யாழ்ப்பாணத்திற்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினருக்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படவில்லை.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினருக்கு மாவிட்டபுரம் முகாமிற்கு அருகில் வாகன தொடரணியை நிறுத்தி முகாமிற்குள் செல்ல முற்பட்டுள்ளனர். இதற்கு கடமையிலிருந்த இராணுவ அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஏனெனில் இராணுவ முகாமிற்குள் அனுமதியின்றி செல்ல முடியாது இதன் போது அங்குள்ள இராணுவ அதிகாரிகளுடன் எதிர்க்கட்சி குழுவினர் வாக்குவாதப்பட்டுள்ளனர்.

உலகத்தில் எந்தவொரு நாட்டிலுமே அனுமதியின்றி இராணுவ முகாமிற்குள் செல்ல முடியாது. ஏனெனில் இராணுவ முகாமோ பொலிஸ் நிலையமோ பொதுமக்களின் காட்சி கூடங்கள் அல்ல எனவும் எவ்விதமான முன் அறிவித்தலோ அனுமதியோ பெற்றுக் கொள்ளாமையினாலேயே எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினருக்கு இன்நிலை ஏற்பட்டது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment