Tuesday, April 16, 2013

சரத் பொன்சேக்காவிடத்து எவ்விதத் தூரநோக்கும் இல்லை! - சாடுகிறது அமெரிக்கா

2010 இலங்கையில் அமெரிக்காவின் பிரதித் தூதுவராகக் கடமையாற்றிய ரெபேக்கா கொஹேன் தொடர்புடகமொன்றின் மூலமாக, ‘பொன்சோக்காவுக்கு பொருளியல் பற்றிய தெளிவு இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் செய்தியை வைத்துக் கொண்டு விக்கிலீக்ஸ் இணையத்தளம் ‘அரச ஊழியர்களின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிப்பதாகவும், இலங்கையிலுள்ள பிரபலங்களுக்கு ரூபா இரண்டாயிரம் மாதாந்தக் கொடுப்பனவு வழங்குவதாகவும் சரத் பொன்சேக்கா உத்தரவாதமளித்த போதும், அவர் தம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றிப் பரவலானமுறையில் பேசுவதற்குத் தயங்கினார் என்றும் குறிப்பிடுகிறது.

அநியாயங்களை அடியோடு அழிப்பதாக அவர் கூறியிருந்தபோதும், அதற்கான தெளிவான திட்டங்கள் அவரிடம் இல்லையென்று சந்தேகமின்றிக் குறிப்பிடலாம் என கொஹேன் தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  April 16, 2013 at 4:39 PM  

MR.Sarath Fonseka was a military man.
Hope he is not an economics graduate to condemn him.However learning and counting experience will make man or woman for him or her to make suitable for their career that they had chosen.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com