இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக செயற்பாட்டுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இனங்களிடையே முறுகலை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சிப்பது குறித்து அரசாங்கம் அவதானமாக இருப்பதாக பிரதமர் தி.மு. ஜயரட்ன கூறினார்.
வடக்கில் இருந்து 80 ஆயிரம் முஸ்லிம்கள் புலிகளினால் துரத்தப்பட்டபோது மெளனம் காத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று முஸ்லிம்கள் குறித்து நீலிக் கண்ணீர் வடிப்பதாகவும் முஸ்லிம்களுக்கு எதுவித பிரச்சினையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் முன்வைத்த கவனயீர்ப்புப் பிரேரணைக்குப் பதிலளித்த அவர் சத்தியத்துடன் அசத்தியத்தை கலக்காதே என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவ்வாறு மெய்யுடன் பொய்யைக் கலப்பது மதத் தலைவர்களை அவமதிப்பதாகும். இலங்கையில் முஸ்லிம்கள் நீண்டகாலமாக தமக்கே உரிய, மரபு, கலாசாரங்கள் மற்றும் தனித்துவத்துடன் வாழ்கின்றனர். அவர்கள் மருத்துவம், விஞ்ஞானம், கல்வி, சட்டம் என பல்வேறு துறைகளுக்கு பங்களித்து வருகின்றனர். சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நீண்டகாலமாக நெருங்கிய உறவு காணப்படுகிறது.
நாட்டில் அநேக மதஸ்தலங்கள் உள்ளன. சிலர் பிரபலமடைவதற்காக இனங்களிடையே பிரச்சினை ஏற்படுத்த முயல்கின்றனர். சில சிறு குழுக்கள் நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயல்கின்றன. ஒருபோதும் இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்த இடமளிக்க முடியாது. 1990 இல் வடக்கிலிருந்து துரத்தப்பட்ட 80 ஆயிரம் முஸ்லிம்கள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் குறித்து தமிழ் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை.
எல். ரி.ரி.ஈ. யின் தனி ஈழம் குறித்து பேசினாலும் தமிழ், தலைவர்கள் முஸ்லிம் மக்களின் பிரச்சினை குறித்து பேசவில்லை. இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியை குழப்ப தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முயல்கிறது. இன்று முஸ்லிம்கள் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது. முதலில் அவர்கள் வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற உதவவேண்டும்.
நாட்டில் இனவாதத்தை தூண்டி தமது தேவைகளை நிறைவற்றிக்கொள்ள சில தரப்பினர் மேற்கொள்ளும் முயற்சி குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினையுடன் தொடர்புடைய தரப்புகளுடன் பேசி புரிந்துணர்வை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இன நல்லுறவுக்கு எதிரான முயற்சிகள் தொடர்பிலும் அவதானமாக உள்ளோர்.இலங்கையில் வாழும் 8 வீதமான முஸ்லிம்கள் குறித்து மட்டுமன்றி உலக முஸ்லிம்கள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்துகிறார். பலஸ்தீன மக்களின் உரிமைகள் பற்றி அவர் குரல்கொடுத்தார்.இங்கு உள்ள முஸ்லிம்களுக்கு அநீதி செய்வதாக கூறுவதை ஏற்க முடியுமா நாட்டில் சிறுசிறு சம்ப வங்கள் நடைபெற்றாலும் அதனை இனவாதப் பிரச்சினை என்று கூறிவிட முடியாது. முஸ்லிம் நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் பிரச்சினை உள்ளது. ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் முஸ்லிம் நாடுகள் எமக்கு உதவின.
இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்தி வருகிறோம். பொது பல சேனாவையும் உலமா சபையையும் அழைத்து பாதுகாப்பு செயலாளர் பேச்சு நடத்தினார். பெபிலியான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் துரித நடவடிக்கை எடுத்தனர். இந்தப் பிரச்சினையினூடாக இனங்களிடையே குழப்பம் பரவாமல் முன்மாதிரியாக பேச்சு மூலம் தீர்க்கப்பட்டது.முஸ்லிம்களுக்கு புலிகள் அநீதி, தாக்குதல்கள், மேற்கொள்கையில் அமைதி காத்த தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு இன்று முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படுவதாக கூறுகிறது. துரத்தப்பட்ட 80 ஆயிரம் முஸ்லிம்களையும் மீள குடியேற்ற கூட்டமைப்பு உதவவேண்டும் எனக்குறிப்பிட்டார்.
அன்று விரும்பியோ, விரும்பாமலோ புலிகளுக்கு அடி பணிய வேண்டிய நிலை எல்லோருக்கும் ஏற்பட்டது உண்மை. அந்த நேரத்தில் பதவிகளை துறந்து நடுநிலையாக இருந்திருக்கலாம்,
ReplyDeleteஆனால் அதை விட்டு தங்கள் கதிரைகளுக்காக தொப்பியை பிரட்டியதன் விளைவை இன்று தமிழ் கூட்டணி உணர்ந்து வருகிறது.
இதேபோலவே எந்த ஒரு அரசியல் வாதியும், தனது சுயநலத்திற்காக இன்று தொப்பியை பிரட்டினால், விளைவுகளை பின்னர் ஒரு நேரம் கட்டாயம் சந்திக்க நேரிடும்.
முடிந்தது முடிந்து போகட்டும். இவை எல்லாம் எமக்கு பாடங்களாக அமையட்டும்.
இனி வரும் காலங்களில் இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களின் எதிகாலம் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன், தமிழ், முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்கள் சுயநலங்களை விட்டு, மக்களின் நலன்களுக்காக ஒற்றுமையாக சேர்ந்து பாடுபட வேண்டிய காலம் வந்து விட்டது.
Our Hon.Primeminister should know the fact that stage actors or cinema actors they laugh,cry,behave like a saint and as a violent person in plays,accordingly to the scene.So likewise these particular actors cover their parts accordingly to the situations.Cheating is their habit,but unfortunately
ReplyDeletebelieving is our weakness