Sunday, April 14, 2013

நெஸ்ட்லே உணவுப் பொருட்களில் குதிரை மாமிசக் கலப்பு! தவறை ஏற்றுக்கொள்கிறது நெஸ்ட்லே!

உலகில் தலைசிறந்த உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்லே தயாரிப்புகளில் குதிரை மாமிசம் கலப்படம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த கலப்பட விசாரணைகள் காரணமாக , நெஸ்ட்லே நிறுவனம் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள ஒப்பந்த கம்பெனிகளிடமிருந்து பொருட்கள் வாங்குவதை நிறுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. முதலில் இந்த குதிரைமாமிச கலப்பு புகாரை மறுத்த நெஸ்ட்லே நிர்வாகம் தற்போது தவறை ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளதால், குதிரை இறைச்சியை கலப்படம் செய்ததை நெஸ்லே ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் வியாபாரத்தை இது பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து நெஸ்ட்லே நிறுவனம்,

‘எங்கள் நிறுவனம் தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும், வாடிக்கையாளர்களின் நலனே எங்களுக்கு முக்கியம்.’ எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் எங்கள் நிறுவனத்திற்கு பொருட்கள் விநியோகிக்கும் இரண்டு கம்பனிகளின் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால் இந்த இரண்டு நிறுவனத்திடமிருந்தும் பொருட்கள் வாங்குவதை நிறுத்திவிட்டோம். எதிர்காலத்தில், இது போன்ற தவறுகள் நிகழாமலிருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

நெஸ்ட்லே நிறுவனம், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள ஒப்பந்த கம்பெனிகளிடமிருந்து பொருட்கள் வாங்குவதை நிறுத்தியுள்ளது என்றாலும், கலப்பட உணவுப் பொருட்கள் பற்றி தான் இப்போது அதிகமாக அடிபடுகிறது.

நெஸ்ட்லே நிறுவனத்தின் தயாரிப்பான ‘பாஸ்தா’வில் குதிரை இறைச்சி 1 சதவிகிதம் கலந்துள்ளது என ரி.என்.ஏ ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

முதலில் இந்த குதிரை மாமிச கலப்பு புகாரை மறுத்த நெஸ்ட்லே நிர்வாகம், தற்போது தவறை ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments :

Arya ,  April 15, 2013 at 12:57 AM  

இந்த நெஸ்ட்லே தென் அமெரிக்கா , ஆப்ரிக்கா , ஆசியா போன்ற நாடுகளில் சிறுவர்களையும் கொத்தடிமைகளையும் வைத்து தனது பாவப்பட்ட தயாரிப்புகளை செய்கின்றது , அத்துடன் இதன் பல தயாரிப்புகளால் புற்று நோய் வரும் அபாயம் உள்ளது, அனால் ஐரோப்பாவில் விற்கும் தயாரிப்பில் குதிரை இறைச்சி கலப்பது என்பது அவர்கள் எவ்வளவு துணிவாக அநியாயங்களை செய்கின்றனர் என்பதற்கு ஒரு சான்று.

Arya ,  April 15, 2013 at 12:57 AM  

இந்த நெஸ்ட்லே தென் அமெரிக்கா , ஆப்ரிக்கா , ஆசியா போன்ற நாடுகளில் சிறுவர்களையும் கொத்தடிமைகளையும் வைத்து தனது பாவப்பட்ட தயாரிப்புகளை செய்கின்றது , அத்துடன் இதன் பல தயாரிப்புகளால் புற்று நோய் வரும் அபாயம் உள்ளது, அனால் ஐரோப்பாவில் விற்கும் தயாரிப்பில் குதிரை இறைச்சி கலப்பது என்பது அவர்கள் எவ்வளவு துணிவாக அநியாயங்களை செய்கின்றனர் என்பதற்கு ஒரு சான்று.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com