Wednesday, April 10, 2013

பொது பல சேனா ஹலாலிலிருந்து நீங்கியது முட்டாள்தனம்! - பௌத்தர்களைக் காட்டிக் கொடுக்கும் செயல்!

ஹலால் சான்றிதழை இல்லாமற் செய்து, நாட்டில் சாந்தியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு பொது பல சேனா மேற்கொள்ளும் செயற்பாட்டைத் தான் ஆதரிப்பதாகவும், ஆயினும் ஒரு செயலாளர் சொன்னவுடனேயே அந்த ஹலாலுக்கு எதிராகவிருந்து பொதுபல சேனா இயக்கம் விலகிக் கொள்வது, பௌத்தர்கள் பற்றியஎண்ணப்பாடு இல்லாமல் பௌத்தர்களைக் காட்டிக்கொடுக்கும் செயல் என சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற விழாவொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஹலாலை முற்றாக ஒழித்து, பௌத்தர்கள் சொல்லும்வரை ஹலால்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிடும் சரத் பொன்சேக்கா, இந்நாட்டுப் பெரும்பான்மை பௌத்த மக்களுக்காக ஹலால் உணவுகளை வியாபார நிலையங்களிலிருந்து முற்றாக ஒழிக்கும் வரை பொதுபல சேனா இயக்கம் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

செயலாளர் சொன்னவுடனேயே ஹலால் போரிலிருந்து விடுபட்டதிலிருந்து, அந்த பௌத்த அமைப்பு இந்த எதிர்ப்புக்கு எடுத்து வைத்த திட்டம் பற்றி சந்தேகம் ஏற்படுவதாகவும் தான்கூட சிறந்த்தொரு பௌத்தன் எனவும் அதனால் பிறமதத்தவர்களை தான் மதிப்பதாகவும் ஆயினும், ஏதேனுமொரு சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கு எதிராகச் செயற்படுவதற்கும், பெரும்பான்மையை ஆட்டிப்படைக்க முயற்சி செய்வதற்கும் தான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் எனவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

1 comment:

  1. You might be in jail. Now you are out of jail. wait you may go in soon.

    ReplyDelete