Monday, April 29, 2013

அரசாங்கம் என்னை விரட்டிவருகிறது...அதனால் நான் மறைந்திருக்கிறேன்...-அஸாத் ஸாலி

பாதுகாப்புப் பிரிவினரால் தன்னைக் கைது செய்வதற்கு சூட்சுமங்கள் நடைபெற்றுவருவதால் தான் மறைந்து வாழ்வதாக தமிழ் முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி குறிப்பிட்டார்.

மறைந்து கொண்டு தனியார் தொலைக்காட்சிச் சேவையொன்றுக்கு, கைத்தொலைபேசி மூலம் கருத்துரைத்த அஸாத்ஸாலி மேலும் குறிப்பிட்டதாவது,

'கடந்த சில காலங்களாக என்னைக் கைது செய்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள். குறுந்தகவல் அனுப்பியதாய்ச் சொல்கிறார்கள், பயங்கரவாதிகளுக்கு உடந்தையாய் இருப்பதாகச் சொல்கிறார்கள், அல்கைதா என்கிறார்கள்... இவ்வாறு பல்வேறு பெயர்களில் என்னை அழைக்கிறார்கள். ஏதேனும் குற்றங்களை எப்படியேனும் என்தலைமேல் சுமத்தி என்னைக் கைது செய்ய முயற்சி செய்கிறது அரசாங்கம்...! நாங்கள் ஒருபோதும் பிழையான எதனையும் சொல்லவில்லை. சரியானதைத்தான் சொன்னோம். தாங்களே எங்களிடம் உடன்பட்ட '13 ப்ளஸ்' தரச் சொல்கிறீர்கள்... எல்எல்ஆர்ஸியினை செயற்படுத்துமாறு கூறுகிறீர்கள்... நாங்கள் அவ்வாறு குறிப்பிடும்போது உங்களுக்கு வலிக்கிறது.... அதனால், ஏதேனும் ஒருவிடயத்தை முன்கொணர்ந்து அஸாத் ஸாலியை கைது செய்வதற்கே அரசாங்கம் முயற்சி செய்கிறது. இப்போது நான் மறைந்திருந்திருக்கிறேன்... என் உயிருக்குப் பேரபாயம் காத்திருக்கிறது'

(கேஎப்)

No comments:

Post a Comment