Sunday, April 7, 2013

முஸ்லிம்களுக்கு எதிரான இலங்கையில் நடைபெறும் பிரசாரங்கள் தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்துகின்றது.

ஈராக்,எகிப்து. லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் எவ்வாறு அமெரிக்கா முஸ்லிம்களுக்கு ஆதரவாக கவனம் செலுத்தியதோ அதேபோன்ற கவனத்தினை செலுத்துவதற்கே இலங்கையிலும் அமெரிக்கா முயற்சிக்கின்து என்பதனை முஸ்லிம்கள் கவனம்கொள்ளத் தவறினால் அது முஸ்லிம்களின் வரலாற்றினையே முடிக்கும் செயலாக அமையலாமென சிலர் கவலையினை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்துள்ளது.கடந்த சில மாதங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம் எதிர்ப்பு இயக்கங்களினால் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது’ என அமெரிக்க தூதுவராலய ஊடக பிரிவின் பொருப்பாளர் கிரிஸ்டோபர் டீல் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் அனுசரணையுடன் முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு சிலாபத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்ததுடன் இந்த பிரச்சினைகள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அறிவிப்பை மிக விரைவில் வெளியிடவுள்ளது’ என்று குறிப்பிட்டார்.

3 comments :

Anonymous ,  April 7, 2013 at 9:21 PM  

Libya,Syria,Iraq,Afghanistan are the good examples.

Anonymous ,  April 8, 2013 at 7:45 AM  

Government and all the communities must be very cautious.Settle all your internal conflicts under your own roof,because your you have a roof over your head.Once you ignore this you may face greater disasters.

Anonymous ,  April 8, 2013 at 9:58 AM  

Do not spit upwards,droplets may fall on your face.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com