தமது வெளிநாட்டு கொள்கைகளை சுயலாபங்களுக்காக அமெரிக்கா செயற்படுத்துகிறது என்றும் ஜனநாயகம், மனித உரிமை என்ற போர்வையில் போலி செயற்பாடுகளையே அவர்கள் முன்னெடுப்பதாக, சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று அமெரிக்கா, மூன்று விடயங்களை மையமாகக் கொண்டே செயற்படுகிறது. ஜனநாயகம், மனித உரிமை, சிவில் உரிமைகள் என்ற போர்வையில் போலி போராட்டங்களை அமெரிக்கா முன்னெடுக்கின்றது. இவர்கள் முறையாக ஜனநாயகம் நிலவும் நாடுகள் மீதே, தமது எதிர்ப்புகளை வெளியிடுகின்றனர்.
அலன்டே, சிலி ராச்சியத்தின் ஜனநாயக கேட்பாட்டுக்கமைய, மக்கள் ஆணையினால் தெரிவு செய்யப்பட்ட, சிறந்த தலைவர். அவர், தனது நாட்டு மக்களை பாதுகாப்பதற்காகவே, அனைத்து திட்டங்களையும் வகுத்தார். இவரது கொலை தொடர்பில் அமெரிக்காவிற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. அதேபோன்று ஈரானின் முஸ்டொக், இவரும் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தலைவர். அன்று சி.ஐ.ஏ. புலனாய்வு அமைப்பினருடன் தொடர்புபட்டு, இவரை கொலை செய்ய, அமெரிக்கா முயற்சி எடுத்தது. இவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக, எந்த தேசத்தின் தலைவரையும் கஷ்டத்திற்குள்ளாக்கக்கூடிய ஒரு நிலையையே, அமெரிக்கா கையாளுகிறது
No comments:
Post a Comment