Saturday, April 27, 2013

முன்னாள் பா.உ அமரர் தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.

கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திறந்துவைப்பு- யாழ்ப்பாணம் உடுவில் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் திரு.வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது புதல்வரான வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.த.சித்தார்த்தன் அவர்களால் யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியை நிறுவுவதற்காக தமிழ் கல்விச் சமூகத்திற்கு கோப்பாயில் நிலப்பரப்பு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இதனை நினைவுகூர்ந்து நிறுவப்பட்ட அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திறந்துவைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. மதகுருமார்களின் பூஜை வழிபாட்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து கல்லூரியின் பீடாதிபதி திரு. எஸ்.கே.யோகநாதன் அவர்களால் இன்றுகாலை 9.40மணியளவில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஆதரவாளர்களும், நண்பர்களும், பொதுமக்களும் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்..

2 comments :

Anonymous ,  April 27, 2013 at 7:11 PM  

Soft spoken kind hearted gentleman late Mr.Dharmalingam,it was very unfortunate that we missed a great gentleman politician.It is great to hear that his beloved son Mr.Siddharaththan had donated acres of land to built a school.We do feel and understand the worthiness of the statue of late MR.D. just in front of the school.

Anonymous ,  April 27, 2013 at 9:31 PM  

Donating acres of land to public.You are really great Mr.Siddharthan.Chip off the old block.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com