Monday, April 22, 2013

ரணில் நாடு திரும்பியவுடன் போராட்டம் வெடிக்குமாம்!

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையின் காரணமாக மக்கள் பெரும் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கு எதிராக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தாம் கவனம் செலுத்தி வருவதாகவும் அறிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி இப்பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் கலந்துரையாடப்பட்டு உடனடி தீர்வு எட்டப்படும் என அறிவித்துள்ளது.

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துதல், நாடு முழுவதிலும் மக்கள் போராட்டங்களை ஏற்படுத்துதல் என மன்சார கண்டன அதிகரிப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வெளிநாடுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள கட்சி தலைவர் ரணில் சில தினங்களில் நாடு திரும்புவார் எனவும் அவர் நாடு திரும்பியதும் இந்நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் எனவும் அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment