பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு அரசாங்கம் பாரிய தொகைப் பணத்தைச் செலவிட்டு, மிக்க் குறைந்த கட்டணத்திலேயே மின்சாரத்தை வழங்குகின்றது. அவ்வாறு செலவிடும் தொகையும், பாவனையாளர்களுக்கான கட்டணமும் உள்ளிட்ட பட்டியலை வெகுவிரைவில் பாவனையாளர்களுக்கு அச்சிட்டு வெளியிடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் டப்ளியு. பீ. கனேவல குறிப்பிட்டார்.
இவ்வாறு பட்டியல் அச்சிட்டு பாவனையாளர்களுக்கு வழங்குவதற்கான காரணம் என்னவென்றால், மின்சாரத்திற்காக அரசாங்கம் எந்தளவு பணத்தைச் செலவிட்டு, எப்படி வழங்குகின்றது என்தை பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஒருநாளைக்கு இரண்டு மணித்தியாலங்கள் அரசாங்கம் மின்வெட்டுவதற்கு ஆவன செய்தால், மின்சார சபைக்கு ஏற்படும் நட்டத்தை ஒருவாறு சீர்செய்யலாம். என்றாலும், அரசாங்கம் பொதுமக்களைக் கருத்திற் கொண்டு செயற்படுவதனால் அவ்வாறு செய்யமுடியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(கேஎப்)
No comments:
Post a Comment