Thursday, April 11, 2013

சம்பந்தனின் முதலைக்கண்ணீருக்கு முஸ்லிம்கள் மயங்கக் கூடாது! - முஸம்மில்

‘சம்பந்தனின் முதலைக் கண்ணீருக்கு முஸ்லிம் சமூகம் ஏமாறக்கூடாது’ என தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிடுகிறது. அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், கொழும்ப நகர சபை உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில்மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம் சமூகத்திற்கெதிராக சில நாசகார சக்திகள் மேற்கொள்ளும் தீய நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் முன்வர வேண்டும் என நேற்று முன்தினம் (09) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை பாராளமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் - முஸ்லிம்கள் ஒரெமொழியைத்தான் பேசுகின்றார்கள் என்றும், அது அழிக்கமுடியாத உறவுப் பாலம் என்றும் குறிப்பிட்டுள்ள சம்பந்தன், சகோதர முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு அல்லற்படும்போது அதனைத் தம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களுள் பிளவுகளை பல்வேறு வழிகளிலும் உண்டாக்கிய புலிப் பயங்கரவாதிகள் மிகவும் கொடூரமான முறையில் மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது 116 பேர் உள்ளிட்ட முஸ்லிம்களை கண்டதுண்டங்களாக வெட்டிக் கொலை செய்தனர். அவ்வாறே, புலிப் பயங்கரவாதிகள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கில் வியாபாரிகளாக நின்று சிறந்த முறையில் வியாபாரம் செய்துவந்த முஸ்லிம் வியாபாரிகளை அநியாயமாக அவர்களின் இருப்பிடங்களிலிருந்து விரட்டியடித்தனர். அவர்களுக்கு மீதியாக இருந்தது அவர்களது ஆடைகள் மட்டுமே! ஆயினும், புலிகளின் தலையாட்டு பொம்மையாகக் காட்சியளித்த - செயற்பட்ட ஆர். சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு என்றும் அமையாக வாய்பொத்தி நின்றனர். தற்போது குறைத் தூக்கத்திலிருந்து அவசரமாக எழுந்து ஆற்றுகின்ற உரை விடயத்தில் முஸ்லிம்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆர். சம்பந்தன் போன்றோரிலிருந்து இயல்பாக இவ்வாறான வார்த்தைகள் வரவே வராது. அவர்கள் சிந்தித்து சோடித்துச் சொல்கிறார்கள் என்பதை கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். இன்று அவர்கள் அவ்வாறு முதலைக் கண்ணீர் வடிப்பதற்கான காரணம் ஒன்றுள்ளது. என்னவென்றால், இன்னுமே தங்களிலிருந்து விலகாத பிரிவினைச் சிந்தனையை - மெய்ப்படுத்திக் கொள்ளவே அவர்கள் கிழக்கு முஸ்லிம்களை பகடைக்காய்களாக மாற்ற முனைகிறார்கள்.

எவ்வாறாயினும் வட மாகாண சபையின் பலத்தை தாங்கள் பெற்றுக்கொண்டு, அதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு வடக்கு கிழக்கை ஒருகுடைக்கீழ்க் கொண்டுவந்து வடக்கு - கிழக்கு ஒருமித்த மாகாண சபையொன்றைக் கட்டியெழுப்புவதற்கே அவர்கள் உண்மையில் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

மூன்று தசாப்தங்களாக கொடூரமான முறையில் பிளவினை ஏற்படுத்திய பயங்கரவாதிகளினால் துன்புறுத்தப்பட்ட, கிழக்கு முஸ்லிம்கள் உட்பட நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் சம்பந்தன் போன்றோரின் சூழ்ச்சிகளுக்கு மதிமயங்கக் கூடாது என்றும் முதலைக் கண்ணீருக்கு மயங்க்க் கூடாது என்றும் குறிப்பிடுகிறோம்’ என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(கேஎப்)

8 comments :

Anonymous ,  April 11, 2013 at 7:36 AM  

Ivarukku thevaiyillaatha velai.
neenkal arasukku nakki theriyunkal.

Anonymous ,  April 11, 2013 at 3:24 PM  

Ameen Ashik
கற்றுக்கொல்லுங்கடா இந்த தில்லை!!
அன்று புத்தள மசூதியில் பாதுகா்புபடையினரின் காட்டு மிரான்டி தாக்குதலை கன்டித்து பேசினார் தந்தை செல்வா இன்று சம்பந்தன்.
இன்று முஸ்லிம் கட்சிகளில் இருக்கின்ற தலைவர்கள் தங்களின் வாயில் பிலாஸ்டர் ஒட்டியவர்கள் போன்று நாடாளுமன்றத்தில் உட்காந்திருக்க ஆர்.சம்பந்தன் என்பவர் இன்று முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிவரும் கொடுமையான வன்முறைகளைப் பற்றி முஸ்லிம் சமூகத்தினருக்காக குரல் கொடுத்துள்ளார். இதனை முஸ்லிம் தலைவர்களான சில அமைச்சர்கள் கேட்டுக்கொண்டு இருந்துள்ளனர்.

Anonymous ,  April 11, 2013 at 3:30 PM  

தலைக்கு மேலே தான் ஒன்றுமில்லை என்று பார்த்தால் உள்ளேயும் இல்லை போல் தெரிகிறது.வைக்கோல் பட்டடை நாய் மாதிரி தங்களும் கதைக்க மாட்டாங்கள் குரல் கொடுப்பவர்களையும் விடமாட்டாங்கள்.அஸ்வர் என்று ஒரு வெங்காயம் மூளையை சிவப்பு தொப்பி போடு மறைத்துக் கொண்டு குறைக்கி றது.மனிசனாக பிறந்தால் ஆண்மையும் வேண்டும் .

karan ,  April 11, 2013 at 3:53 PM  

முஸம்மில் சொல்வது முற்றிலும் சரியானது. இன்று முஸ்லிம்கள் தாக்கப்படும்போது அவர்களுக்காக குரல் கொடுக்க முன்வந்திருக்கும் சம்பந்தன். குpழக்கில் முஸ்லிம்களால் தமிழர்கள் தாக்கப்படும்போது அஸரப்பிடம் வாங்கவேண்டியதை வாங்கிக்கொண்டு பொத்திக்கொண்டு இருந்தவர் என்பதையும் மறக்க கூடாது.

Anonymous ,  April 11, 2013 at 4:03 PM  

கண்கள் மூடிக் கனவுகளைக் கண்டு கொண்டிருந்தவர்கள், சம்பந்தன் ஐயா அவர்களின் பாராளுமன்ற வீர முழக்கத்தில் வெட்கமடைந்து முகம் கவிழ்ந்து போயிருப்பார்கள் என்பது நிச்சயம்.

" இப்படிப்பட்ட சுயநல அரசியல்வாதிகள்தான் நமது சமூகத்தின் பிரதிநிதிகளாக நம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை என்னும் போது இதயம் கசிந்து இரத்தம் பெருகுவதைத் தடுக்க முடியவில்லை."

" மானமிழந்து-மரியாதை இழந்து-உரிமை இழந்து-உணர்வுகள் இழந்து-சூடிழந்து-சுரணையிழந்து ஆளும் கட்சியில் இருப்பதை விட, தன்மானத்துடனும் சுய மரியாதையுடனும் எதிர்க் கட்சியில் இருந்து எமது உரிமைகளுக்காகவும் கௌரவத்துக்காகவும் போராடுவதுதான் சிறந்தது.

சுயநலத்தை விட்டு வருவார்களா??

Anonymous ,  April 11, 2013 at 4:24 PM  

பன்றியின் முதுகில் அல்லாஹ் என்று எழுதி ஒரு கூட்டம் ஊர்வலம் போனபோது, எந்த கொந்தராத்தில் எவ்வளவு சுருட்டலாமென்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தவர்கள்-அல்லாஹ்வின் உருவ பொம்மை செய்து அதை அந்தக் கூட்டம் இழுத்துச் சென்று எரித்த போது, எந்த ஹோட்டலில் தனது மகளின் திருமணத்தை எடுப்பாக நடாத்தலாமென்று இரவும் பகலும் சிந்தித்துக் கொண்டிருந்தவர்கள்-சந்திகள் தோறும் பொதுக் கூட்டம் போட்டு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி அந்தக் கூட்டம் பேசிக்கொண்டிருந்த போது, எந்த நாட்டிற்குச் சென்று இளைப்பாறி இன்பம் காணலாமென்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள்- எமது ஹலால் உணவைப் பறிப்பதற்கு அந்தக் கூட்டம் முழு வேகத்துடன் முயன்ற போது, தமது வங்கி இருப்பை இன்னும் எந்த வழிகளில் அதிகரிக்கலாமென்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தவர்கள்- எமது பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோது, எந்தப் பள்ளிவாசல்களும் தாக்கப்படவில்லை என்று ஈனத்தனமாக அறிக்கை விட்டுக் கொண்டிருந்தவர்கள்- எங்கள் சகோதரிகளின் பர்தா உடைகள் காடையர்களினால் இழுத்து வீசப்பட்ட போது, தமது பெண்டாட்டிகளுக்குப் பட்டுப் புடவைகளைக் கொள்வனவு செய்து கொண்டிருந்தவர்கள்-எமது சகோதரர்களின் தொப்பிகள் கழற்றி எடுக்கப்பட்டுக் கால்களின் கீழ் போட்டு மிதிக்கப்பட்டபோது கண்கள் மூடிக் கனவுகளைக் கண்டு கொண்டிருந்தவர்கள் சம்பந்தன் ஐயா அவர்களின் பாராளுமன்ற வீர முழக்கத்தில் வெட்கமடைந்து முகம் கவிழ்ந்து போயிருப்பார்கள் என்பது நிச்சயம். என்ன செய்வது..? இப்படிப்பட்ட சுயநல அரசியல்வாதிகள்தான் நமது சமூகத்தின் பிரதிநிதிகளாக நம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை என்னும் போது இதயம் கசிந்து இரத்தம் பெருகுவதைத் தடுக்க முடியவில்லை.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com