விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பதுங்கியிருந்த நிலக்கீழ் உல்லாச விடுதி இராணுவத்தினராலும் பயங்கரவாத விமர்சனப் பிரிவினராலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானங்களை அழித்தொழிக்கும் ஏவுகணைகள் களஞ்சியப்படுத்தப்பட்ட இடம் எனக் கூறப்படுகின்ற இந்த பதுங்கு குழி பாரியதொரு கொங்கிரிட்டினால் மூடப்பட்டு, அதன் மேலால் முழுமையாக மண் நிரப்ப்ப்பட்டிருந்தது.
இந்த பதுங்கு குழி இரு தட்டுக்களுடன் கூடியதெனவும், ஏறத்தாழ 10 அடி அளவு தோண்டப்பட்டதன் பின்னரே இதனைக் கண்டுபிடிக்க முடிந்த்து எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏ -9 பாதையிலிருந்து 09 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பாரிய தென்னந்தோப்பிலேயே இந்த பதுங்குகுழி அமைந்திருந்தது. அங்கு சூட்சும்மான முறையில் படிக்கட்டுக்களும் அமைக்கப்பட்டிருந்தன.
ஏவுகணைகளைப் பாதுகாப்பதற்காக வைக்கப்பட்டிருக்க்க்கூடும் எனக் கருதக் கூடிய முறையில் அமைந்த பெட்டிகள் அங்கு இராணுவத்தினருக்குக் காணக்கிடைத்துள்ளது. அங்கு பிரபாகரன் மாத்திரம் பயன்படுத்தத்தக்க முறையில் சிறியதொரு உலங்கு வானூர்தியும், குண்டு துளைக்காத வாகனமொன்றும் இருந்ததாகவும் பாதுகாப்புப் பிரிவினருக்குச் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நாட்களில் அதிக மழை காரணமாக தேடலில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
(கேஎப்)
No comments:
Post a Comment