Tuesday, April 16, 2013

குவைட் மன்னரை விமர்சித்ததற்காக ஐந்து வருட சிறைத் தண்டனை!

குவைட் நாட்டின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரான முஸல்லம் அல் - பர்ரக் (Mussallam al-Barrak) கிற்கு ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குவைட் மன்னர் ஷெய்க் ஸபா அல்-அஹமட்- ஸபா(Sheikh Sabah al-Ahmad Al-Sabah) வை இழிவாகப் பேசிய குற்றத்திற்காகவே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் ஒக்டோபரில் குவைட் பாராளுமன்றத்திற்கு முன்பாக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மக்கள் முன் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் முஸல்லாம் அல்-பராக் ‘நாட்டை ஏகாதிபத்தியத்தின்பால் கொண்டுசெல்வதற்கு மக்கள் மன்னருக்க இடமளிக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தார். தங்களது தலைவரைச் சிறைப்படுத்தினால் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவோம் என அவரது ஆதரவாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரான முஸல்லாம் அல்-பராக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொழிற்சங்கவாதியுமாவார்.

குவைட் அரசுக்கு எதிராகச் செயற்பட்ட, அரசுத் தலைவரை இழிவுபடுத்திய இணையத்தள வலைப்பூக்களை நடாத்தியவர்களும், அரசியலாளர்கள் பலரும் இவ்வாறு ஏற்கனவே சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

(கேஎப்)

3 comments :

Anonymous ,  April 16, 2013 at 7:34 AM  

மத்திய கிழக்கு நாடுகள் இன்னும் நவீன உலகத்து மனிததன்மை, அறிவியல் வளர்ச்சி, மனித நாகரீகம், பண்பாடு போன்றவற்றில் இன்றும் முன்னேற்றம் இல்லை. இதுவரைக்கும், கற்கால மன்னர் ஆட்சி மற்றும் கற்கால சிந்தனைகள், சட்டங்கள், நடத்தைகலிருந்து விடுபடவில்லை. பணம் இருந்தால் மட்டும் போதுமா? மனிதனுக்கு ஆறறிவும் வேண்டுமல்லவா?

Anonymous ,  April 16, 2013 at 11:36 AM  

இந்தக் காட்டுமிராண்டிகளுக்காகத் தான் ஜனநாயகத்தின் பாதுகாவலன் எனத் தன்னைச் சொல்லும் அமெரிக்கா 1991 ல் யுத்தத்திற்குச் சென்று இன்றும் பாதுகாத்து வருகிறது.

எங்க போய் என்ர தலையை முட்ட ?

Anonymous ,  April 17, 2013 at 7:20 AM  

Internation laws made by a few countries impose the laws on certain small growing countries,Saudi countries are exceptional as they have enough wealth

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com