Monday, April 8, 2013

மாத்தளை மனித புதைகுழியின் உண்மையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு

மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனித புதைகுழி குறித்து முழுமையான விசாரணையை நடத்துவதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதற்கான குழுவை நியமித்துள்ளார்.மாத்தளை ஆஸ்பத்திரிக்கு அருகில் தோண்டப்பட்ட பாரிய புதைகுழி ஒன்றிலிருந்து நூற்றுக்கணக்கான மனித தலைகளும், உடல் எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான விசாரணையை நடத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை ஆஸ்பத்திக்கு புதிய ஒரு கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணியில் கடந்தாண்டு நவம்பர் மாதம் கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே மனிதத் தலைகளையும், எலும்புக்கூடுகளையும் கண்டுபிடித்தனர்.இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த புதைகுழிகளை தோண்டும் பொறுப்பு தொல்பொருள் பட்டப்பின்படிப்பு நிலையத்திற்கு கொடுக்கப்பட்டது.

இவர்கள் இதுவரையில் 154 பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment