Monday, April 29, 2013

மட்டு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதி இயக்குநரை விரட்டியடிக்க கருணா முயற்சி.

மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதி இயக்குனராக உள்ளார் மனோகரன். இவருக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளதாம். இந்த இடமாற்றத்தின் பின்னணியில் கருணா எனப்படுகின்ற வினாயகமூர்த்தி முரளிதரன் உள்ளதாக அறியக்கிடைக்கின்றது. கருணாவின் உத்தரவுகளை மனோகரன் செயற்படுத்தவில்லை என்றும் அவருக்கு கைப்பொம்மையாக இருக்க வில்லை என்றுமே இவருக்கான இடமாற்றம் தயார் செய்யப்பட்டதாக அலுவலக வட்டாரங்களில் இருந்து இலங்கைநெற் இற்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக நாம் மனோகரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, இடமாற்ற உத்தரவு வந்துள்ளதாகவும் அதனை செயலிழக்க செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்த அவர் ஊடகங்களுக்கு மேலதிகமாக எவ்வித கருத்தும் தெரிவிக்க முடியாது என்றார்.

இலங்கையில் விடுதலைப்போராட்டம் என்ற பெயரில் ஆயுதக்குழுக்கள் உருவாகின. அவர்கள் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு மக்களின் உரிமைகளை பறித்ததே வரலாறு கண்ட உண்மை. அதற்கு வடகிழக்கு தமிழ் அதிகாரிகளும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றார்கள். அதிகாரிகள் தமது கடமைகளை சரிவர செய்வதை விடுத்து ஆயுததாரிகளுக்கு தலையாட்டும் பொம்மைகளாக செயற்பட்டு வடகிழக்கின் நிர்வாகத்தை ஆயுததாரிகளிடம் கையளித்திருந்தனர்.

இலங்கை அரசிடம் சம்பளத்தை பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவை செய்யாமல் ஆயுதக்குழுக்களுக்களின் முன் கைகட்டி மண்டியிட்டு நின்ற அதிகாரிகளின் செயற்பாடுகளாலேயே மக்கள் ஆயுததாரிகளுக்கு கட்டுப்படவேண்டிய நிர்ப்பதந்தம் எற்பட்டது என்பது வரலாற்று துரோகம் ஆனால் இத்துரோகம் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட முடியாதது.

இன்று பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கை மீட்கப்பட்டிருக்கின்றது. முன்னாள் பயங்கரவாதிகள் இன்று அரசியல்வாதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்றும் முன்னாள் பயங்கரவாதிகளின் முன் வடகிழக்கு அதிகாகரிகள் மண்டியிட்டு நிற்கவே செய்கின்றனர்.

அதிகாரிகளின் இச்செயற்பாடுகள் நீடிக்குவரை முன்னாள் ஆயுததாரிகளின் ஆதிக்கம் நிலைத்து நிற்கவே செய்யும்.

எனவே அதிகாரிகள் மீது முன்னாள் ஆயுததாரிகள் ஆழுமை செலுத்த முற்படுகின்றபோது, அதை எதிர்த்து நிற்க தம்மை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.

மனோகரன் தனது இடமாற்றத்தை தனக்கு உள்ள தொடர்புகள் ஊடாக செயலிழக்க செய்து கொள்ளலாம். ஆனால் மனோகரன் இதேபோன்றதோர் அநீதி சக ஊழியர் ஒருவருக்கு இடம்பெறக்கூடாது என நினைத்திருப்பாராக இருந்திருந்தால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்திருக்க மாட்டார். மாறாக அநீதிக்கு எதிராக பின்கதவால் கள்ளக்கோழி பிடிக்காமல் வெளிப்படையாக செயற்பட்டிருக்க முடியும்.

அதாவது என்றோ ஒருநாள் நான் கருணாவின் காலில் விழவேணடி வரும் நான் அவரை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பது மனோகரனின் எதிர்பார்ப்பு.

சக அதிகாரி ஒருவனுக்கு எதிர்காலத்தில் இதுபோன்று அநீதி இடம்பெறக்கூடாது என்ற பொது நோக்கம் மனோகரனுக்கு மாத்திரமல்ல வடகிழக்கிலுள்ள அதிகாரிகள் 98 விழுக்காடு அதிகாரிகளிடம் இல்லை என்பது கவலைக்குரியதே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com