Friday, April 19, 2013

பெற்றோரிடையே முருகல், உயிர்துறந்தான் மைந்தன்!

தனது பெற்றோர் சதாவும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதால், மனமுடைந்துபோன பொறியியலாளரான மகன் பம்பலப்பிட்டிய காசல் வீதியிலுள்ள வீடொன்றின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பம்பலப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளவர் தொடர்மாடியின் 6 ஆவது மாடியில் வசித்துவந்த கங்காதன் குருதரன் (23) என்ற வாலிபனாவார். தற்கொலை செய்துகொண்டுள்ளவர் மோட்டார் வாகன நிறுவனமொன்றில் பொறியியலாளராக க் கடமையாற்றியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது பெற்றோர் அடிக்கடி சண்டையில் ஈடுபடுவதனால், இந்த இளைஞனின் உள்ளம் உடைந்துபோயுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். பெற்றோர் பிரச்சினையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஆத்திரம் தாங்கமுடியாமல், கையடக்கத் தொலைபேசி மூலமாக பெற்றோர் இருவருக்கும் குறுந்தகவல் அனுப்பிவிட்டு ஆறாவது மாடியிலிருந்து கீழே பாய்ந்து உயிர்துறந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கீழே விழுந்துள்ள அந்த இளைஞன் அவ்விடத்திலேயே இறந்துள்ளார்.

ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டிருந்த அந்த குறுஞ் செய்தியில், ‘நீங்கள் இருவரும் அடிக்கடி சண்டையிடுகிறீர்கள், அது எனக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது., நான் அதனை வெறுக்கிறேன். எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் கேட்க மறுக்கிறீர்கள். அதனால், நான் தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்துவிட்டேன். என்னை மன்னிக்கவும்’ என்று இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(கேஎப்)

3 comments :

Anonymous ,  April 19, 2013 at 7:44 PM  

We are really sorry for the Engineer,
but committing suicide he hasn`t solved the problem.He would have taken the mentally ill patients to a psychiatrist.with the help of his neighbors,relatives.In case if they refused,he would have changed the life style to a different direction.

Tharik ,  April 19, 2013 at 11:02 PM  

தவறான முடிவு.எந்த பிரச்சனைகளுக்கும் தட் கொலை தீர்வாகாது இறந்த பிறகு அழுது,புலம்பி எந்த பியோசனமும் இல்லை.ஏனைய பெற்றோர்களுக்கு இது பாடமாக இருக்கட்டும் குடும்பத்தவர்களுக்கு எங்களின் அனுதாபங்கள்

Unknown April 20, 2013 at 8:49 PM  

பிஞ்சு உள்ளங்களை புரிந்து கொள்ளாத பெற்றோருக்கு ஒரு பாடமாக அமையட்டும்.அவசரப் பட்டு ஒரு முடிவு எடுக்கக்கூடாது என்பது நமக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com