பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளரும், ‘இடி’ வாராந்தரப் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும், மெட்ரோ நிவ்ஸ் பத்திரிகையின் துணையாசிரியருமான சூரன் ஏ. ரவிவர்மாவின் ‘வடக்கே போகும் மெயில்’ சிறுகதைத் தொகுதிவெளியீட்டு விழாவும், அமரர் ராஜ ஸ்ரீ காந்தன் நினைவு நிகழ்வும் எதிர்வரும் சனிக்கிழமை (20) பி.ப. 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடந்தேறவுள்ளது.
மூத்த ஊடகவியலாளர் வி. தேவராஜ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், நூல் அறிமுகத்தை பேராசிரியர் மா. கருணாநிதியும், ராஜ ஸ்ரீ காந்தன் பற்றிய நினைவுரையை பிரபல எழுத்தாளரும், கவிஞருமான மேமன் கவியும், கருத்துரைகளை பிரபல ஆங்கில தமிழ் பத்தி எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான கே. எஸ். சிவகுமாரன், ஏ.ஆர்.வி. வாமலோஜன் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் வாழ்த்துரை வழங்கவுள்ள ‘வடக்கே போகும் மெயில்’ சிறுகதைத் தொகுதியின் முதற்பிரதியை புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் பெற்றுக் கொள்ளவுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
No comments:
Post a Comment