Wednesday, April 10, 2013

பைபிளில் வரும் பிசாசு பரக் ஒபாமாவா?

(தமிழில் : கலைமகன் பைரூஸ்)

மார்க் பர்னட், ரோமா டொவுன் எனும் இருவரினால் தயாரிக்கப்பட்டுள்ள ‘த பைபள்’ எனும் தொடர் நாடகம் இந்நாட்களில் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒலி-ஒளிபரப்பாகி வருகின்றது. ‘த பைபள்’ தொடர் நாடகம் ஏனோதானோ என அங்கு ஒலிஒளிபரப்பப்படவில்லை.அது பெரும் பூதகரமாக மாறி நாட்டை ஆட்டிப்படைக்கிறது. இந்த நாடகம் சாத்தான் அல்லது பிசாசு எனும் பாத்திரத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ‘த பைபல்’ நாடகத்தில் வரும் சாத்தான் அல்லது பிசாசு பாத்திரத்தில் வரும் நடிகரின் உருவம் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை ஒத்திருக்கிறது. பைபல் நாடகத்தொடர் இதனால் தான் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி அமெரிக்காவை குலுக்குக் குலுக்கியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை பிசாசுக்கு உவமித்திருப்பதனால் அமெரிக்க அரசுத் தலைவரை இந்நாடகம் இழிந்துரைத்துள்ளது என அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளதுடன், வெகுசீக்கிரமே இந்நாடகத்தை தடை செய்யுமாறும் கேட்டுள்ளனர். என்றாலும் ‘த பைபல்’ தயாரிப்பாளர் இதுபற்றிக் குறிப்பிடுகையில், தாங்கள் வெளியிட்டுள்ள திரைப்படத்தில் வரும் சாத்தானிய பாத்திரத்திற்கும் பரக் ஒபாமாவிற்கும் எவ்வித்த் தொடர்பும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த்த் தொலைக்காட்சித் தொடர் நாடகம் பரபரப்பை ஏற்படுத்தக் காரணம், அந்நாடகத்தில் ஒலிபரப்ப்ப்பட்ட கதைப் பின்னணியாகும். இந்நாடகம் History channel எனும் தொலைக்காட்சி அலைவரிசையிலேயே ஒலி-ஒளிபரப்பப்படுகின்றது. சாத்தானின் வரலாறு ஒலிபரப்ப்ப்படுவதற்கு முன்னரேயே இந்தப் கதைப்பின்னணிக்குப் பின்னரேயே!

தற்போது பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்நாடகத்தில் சாத்தானாக நடிப்பவர், மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த மொஹமென் மெஹட் க்வாஷான் எனும் அரங்கக் கலைச் சிற்பியாவார். இது இவ்வாறிருக்க, டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் பிரசாரகர் கிளேன் பெக் குறிப்பிடும்போது, பைபிளில் வரும் சாத்தான் சரியாக அமெரிக்க ஜனாதிபதியை ஒத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் மட்டுமன்றி இன்னும் பலர் கருத்துரைக்கும்போது, ‘த பைபிளி’ல் வரும் பாத்திரம் நூறு வீதம் ஒபாமா போன்றே இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளனர். இது தவிர, ‘ஹிஸ்ட்ரி ஷெனல்’ (History channel) தொலைக்காட்சி, இந்நாடகத்திலுள்ள சாத்தானின் கதை புதிய மற்றும் பழைய ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கதைப் பின்னணியையே கொண்டமைந்துள்ளது என்றும், இந்தப் பாத்திரம் தற்போது உயிருடனுள்ள எந்தவொருக்கும் உவமையாக மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நாடகத்தில் பங்கேற்றுள்ள நடிகர் பரக் ஒபாமாவை விட அதிக மாற்றங்களுடன் கூடியவர் எனவும் அந்த தொலைக்காட்சிச் சேவை குறிப்பிடுகிறது.

‘இது ஆட்களை குழப்புகின்ற கதை’. இவ்வாறு சொல்பவர்கள் வேறு யாருமல்லர். இந்நாடகத்தைத் தயாரித்துள்ள மார்க் பர்னட் மற்றும் ரோமா டோன் ஆகிய இருவரும்தான். பைபளில் வரும் சாத்தானின் பாத்திரத்தை நடிப்பவர் மொரோக்கோவில் நன்கு புகழ்பெற்ற விருதுகள் பலபெற்றுள்ள அரங்க நடிகரொருவராவார். ஏற்கனவே பைபிளை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பல வரலாற்று நாடகங்களில் அவர் திறம்பட நடித்துள்ளார். பரக் ஒபாமா ஆட்சிபீடத்தில் அமர்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த ஆற்றல்மிக்க நடிகர் பல நாடகங்களில் மிகவும் மோசமான, பயங்கரமான பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். அக்காலத்து எவரும் இது பரக் ஒபாமாவுக்கு உவமித்துச் சொல்லக்கூடிய பாத்திரம் இவர் என ஓலமிடவில்லை. ஒபாமா ஜனாதிபதியாக அமர்ந்தது அண்மைக்காலத்திலேதான். ஆயினும், இந்த அரங்கக் கலைச் சிற்பி அதற்கு இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்னரேயே நாடகத்துறைக்குள் நுழைந்துவிட்டார்.

மார்க் பர்னட் பிரித்தானியாவில் பிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவர். ஆரம்பத்தில் அவர், ‘ரியலிட்சோ’ வினைத் தயாரித்து தயாரிப்பாளாராக மாறியவர். அது ‘சர்வியர்’ என அழைக்கப்பட்டது. அது அவரது மனைவியின் பெயர். ரோமா டொவுன் 1990 களிற்றான் நாடகத்துறைக்குள் நுழைந்தார். Toucher ou an Angel எனும் நாடகத்தில் தேவகன்னி பாத்திரமேற்று அவர் நடித்திருந்தார்.

தாம் பைபிளை, உலகப் புகழ்பெற்ற அரங்கக் கலைஞர்களுடன் சேர்ந்தே தயாரித்துள்ளோம் எனக் குறிப்பிடும் மார்க் பர்னாட், யாரேனும் ஒருவர் இந்நாடகத்தில் வரும் சாத்தானிய பாத்திரத்தை பரக் ஒபாமாவுக்குச் சமப்படுத்துவாராயின் அதற்காக கவலைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது இவ்வாறிருக்க, இந்நாடகத்தில் வரும் சாத்தான் பாத்திரம் பற்றிக் கருத்துத் தெரிவிக்கின்ற ஆய்வாளர்கள், இது ஒரு கலைப்படைப்பு என்றும், சாத்தான் பாத்திரத்தை யாருக்கும் உவமையாக்க தயாரிப்பாளர்கள் முனையவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றனர். எதுஎவ்வாறாயினும், நாடகத்தைத் தொடர்ந்தேர்ச்சியாகப் பார்வையிடும் பார்வையாளர்கள் குறிப்பிடுகையில், யார் என்ன சொன்னாலும் நாடகத்தில் வரக்கூடிய மொரோக்கோ கலைஞர் சரியாக பரக் ஒபாமாகவையே ஒத்திருக்கின்றார் என்று குறிப்பிடுகின்றனர். அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ‘த பைபள்’ நாடகத்தை பரக் ஒபாமாவும் பார்வையிட்டுள்ளார். ஆயினும் இதுவரை இந்நாடகம் பற்றி பரக் ஒபாமா எதுவும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை.

ஒபாமா பைபிள் பற்றியும் பிசாசு பற்றியும் எதுவும் கருத்துரைக்காதபோதும், அவர் கோபத்தினால் வெடிப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்ற நிகழ்வொன்று சென்ற ஆண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதுதான், ‘எச்பீஓ’ தொலைக்காட்சியிலிருந்து நீக்கப்பட்ட ‘கேம் ஒப் டரோன்ஸ்’ (Game of Turones) நாடகம். இந்நாடகத்தில் காட்சியளித்த நடிகர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ளியூ புஷ்ஷை ஒத்திருந்தார். அதனாற்றான் அந்தப் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இதனைக் கண்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பெரும் கோபமுற்றார். பின்னர், தயாரிப்பாளர்கள் ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினர். தாங்கள் அவ்வாறான சிந்தனையுடன் அந்த நாடகத்தைத் தயாரிக்கவில்லை என ஜனாதிபதியிடம் குறிப்பிட்டிருந்தனர். கேம் ஒப் டரோன்ஸ் இன்றும் எச்பீஓ தொலைக்காட்சிச் சேவையில் ஒலி-ஔபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. தற்போதும் ஞாயிறு நாட்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை ‘த பைபள்’ நாடகம் ஒலி - ஒளிபரப்பப்படுகின்றது. இதனை 10.8 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிடுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்நேரம் வரை 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்நாடகத்தின் பல தொடர்களைப் பார்வையிட்டுள்ளனர். இது பத்து அங்கங்களைக் கொண்ட நாடகமாகும்.

எது எவ்வாறாயினும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பிசாசின் கதையை இந்நாடகத்திலிருந்து நீக்க தாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தயாரிப்பாளர் மார்க் பர்னட் குறிப்பிட்டுள்ளனர். முழுக் கதையும் சாத்தானின் கதையைப் பின்னியே அமைந்துள்ளதால், அதில் எந்தவொரு பகுதியையும் நீக்கவியலாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(சிங்களத்தில் :ஆர்தர் யூ. அமரசேன)

1 comments :

Anonymous ,  April 11, 2013 at 11:23 AM  

The present ERA we think that SATAN has more power than the invisible super natural power.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com