Monday, April 8, 2013

புலிகள் விட்டுச் சென்றவை : ஏ9 வீதியில் கன்னிவெடிக்கு ஒருவர் பலி.

யாழ் ஏ9 வீதி முகமாலை பிரதேசத்தில் கன்னி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் கன்னி வெடி ஒன்றை செயலிழக்கச் செய்யும்போது அது வெடித்துச் சிதறியதில் பலியாகியுள்ளார்.

பலியாகிய நபர் யாழ். முகமாலை பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன பணியாளராவார்.

இன்று திங்கட்கிழமை காலை 9.55 மணியளவில் முகமாலை பகுதியில் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டதை அடுத்து அங்கு சென்று பார்த்தபோது சக ஊழியர் ஒருவர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருந்ததை உணர்ந்தாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


காயமடைந்தவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.

அமுக்க வெடியில் சிக்கி உயிரிழந்தவர் கிளிநொச்சியைச் சேர்ந்த கே. முருகவேல் எனத் தெரியவகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் சக பணியாளர்களிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com