Sunday, April 28, 2013

சீனா 8 போர் கப்பல்களை ஜப்பான் தீவுக்கு அருகே அனுப்பி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பதட்ட நிலை!

சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே ஓகிநாவா என்ற தீவு கூட்டம் உள்ளது. தற்போது இந்த தீவு ஜப்பானிடம் உள்ளது. இந்த தீவு தங்கள் நாட்டுக்கு சொந்மானது என்று சீனாவும் கூறுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நடந்து வருகிறது.

சீனா திடீரென இந்த தீவுகளை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவி வந்தது. இதற்கிடையே பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்தன.

இந்நிலையில் சீனா 8 போர் கப்பல்களை தீவு அருகே அனுப்பி உள்ளது. அந்த கப்பல்கள் தீவு அருகே 12 நாட்டிக்கல் மைல் தூரத்தில் முகாமிட்டுள்ளன. இதற்கிடையே சீனா திடீரென போர் விமானங்களை அந்த பகுதிக்கு அனுப்பி வைத்தது. 40 விமானங்கள் அந்த தீவு கூட்டத்தின் வழியாக பறந்து சென்றன.

திடீரென போர் விமானங்களை சீனா அனுப்பி வைத்தது ஏன் என்று தெரியவில்லை. இது மீண்டும் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. போர் விமானங்கள் பறந்ததையடுத்து ஜப்பானும் உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment