இந்திய தலைநகரமான புதுடெல்லி, பெண்களைப் பொருத்தவரை பாதுகாப்பற்ற இடமாக மாறிவருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, பெண்களின் பாதுகாப்பு குறித்து பல சுற்று பட்டிமன்றங்கள் நடந்துள்ளதேயொழிய, எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
கடந்த மார்ச் மாதம் வரை டெல்லியில் 393 கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெளிச்சத்திற்கு வராமல் போன சம்பவங்கள் இதைவிட இருமடங்கு அதிகமாக இருக்கும் என மகளிர் அமைப்பினர் கூறுகின்றனர்.
டெல்லி காந்தி நகர் பகுதியில் 5 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து கொதிப்படைந்த பலர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்ம் வடத்தி வரும் வேளையில், கிழக்கு டெல்லி பகுதியில் 13 வயத சிறுமியை 8 பேர் மிருகத்தனமாக கற்பழித்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிழக்கு டெல்லி, பர்ஷ் பஜார் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த (மார்ச்) மாதம் 15-ம் தேதி தனது தம்பியுடன் கடைக்கு சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த காரில் இருந்து இறங்கிய சிலர், அந்த பெண்ணை காரில் கடத்திக் சென்று டெல்லியின் புறநகர் பகுதியான லோனி என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.
தனது மகள் சிலரால் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
தனி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை சுமார் ஒரு வார காலம் 8 பேர் மாறி, மாறி கற்பழித்து துன்புறுத்தியுள்ளனர்.
அவர்களின் பிடியில் இருந்து தப்பிய அந்த பெண், மார்ச் 24-ம் தேதி வீடு வந்து சேர்ந்தாள்.
மகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த தந்தை, அவள் வீடு திரும்பிய, பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், எங்கள் மகள் கடத்தப்பட்டது, கற்பழிக்கப்பட்டது, வீடு திரும்பியது என எல்லா விபரங்களையும் போலீசாரிடம் தெரிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமியின் தாயார் கூறுகிறார்.
போலீசாரிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்று தீர்மானித்த சிறுமியின் தந்தை, தனது மகளை கற்பழித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கடந்த 9-ம் தேதி உள்ளூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு, கடந்த 15-ம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவள் பலரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
தன்னை கற்பழித்த 8 பேரில் 4 பேர் தங்கள் வீடு இருக்கும் பகுதியை சேர்ந்தவர்கள் என்று சிறுமி அடையாளம் கூறினார். இதையடுத்து, அவர்களில் 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
Capital city of India is becoming the the worst notorious place described as the heaven of rapists,women trafickkers etc etc.Will there be an end to this nonsence or it will go on for ever in order to gain some sort of popularity.
ReplyDelete