62 மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் சாதனை
நேபாள நாட்டைச் சேர்ந்த ரபிலமிச்சானே (36) என்பவர் ‘புத்தர் நோபாளத்தில் பிறந்தார்’ என்ற தலைப்பில் தொடர்ந்து 62 மணிநேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் உலகசாதனை படைத்துள்ளார். இவர் நடத்திய தொடர் நிகழ்ச்சியில் நேபாள முன்னாள் பிரதமர், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என பல துறையைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று தங்களது கருத்துகளை வெளிப்படுத்தினர்.
கடந்த 11ம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்த சாதனை நிகழ்ச்சியை 62 மணி நேரம் 11 நிமிடங்களுக்கு பின்னர் இவர் நிறைவு செய்தார். கின்னஸ் விதிமுறைகளின்படி ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். எனினும் ரபி லமிச்சானே அடிக்கடி ஓய்வெடுக்காமல் பல 5 நிமிடங்களை சேமித்துக்கொண்டு நீண்ட நேரம் ஓய்வெடுத்து இந்த சாதனையை நிகழ்த்தினார். சாதனையின் நிறைவில் கின்னஸ் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
2011ம் ஆண்டு உக்ரைன் நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் 52 மணி நேரம் தொடர் நிகழ்ச்சி நடத்தியதுதான் முந்தைய சாதனையாகக் கருதப்பட்டது.
0 comments :
Post a Comment