அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் 'போர்க்குற்ற பரிசுத்தொகை திட்டத்தில்' புதிதாக உகாண்டா நாட்டைச் சேர்ந்த கிளர்ச்சி குழுவின் தலைவர் ஜோசப் கெனியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 62 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழுவைச் சேர்ந்த 3 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஜோசப் கெனி உகாண்டாவில் கடவுளின் எதிர்ப்புப் படை (லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி) என்ற கிளர்ச்சிக் குழுவை அமைத்து அரசுக்கு எதிராக பல தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கெனியின் தீவிரவாத நடவடிக்கைகள் 4 நாடுகளில் பரவி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் மீது குழந்தை கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்கள் சாட்டப்பட்டு, உலக அளவில் தேடப்பட்டு வந்தார்.
இவர் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டின் காடுகளில் மறைந்திருப்பதாகக் கூறி அமெரிக்கா மற்றும் உகாண்டா அரசு தேடுதல் வேட்டையை நடத்தி வந்தது.
ஆனால் தற்போது மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் நடந்து வந்த உள்நாட்டு போர்களில் கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு தலைநகரை கைப்பற்றினர். இதனால் அமெரிக்கா தேடுதல் வேட்டையை நிறுத்தி விட்டு, இந்த பரிசு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
No comments:
Post a Comment